tamilnadu

img

இளைஞர்களின் வேலைவாய்ப்பை பறிக்கும் அரசாணையை ரத்து செய்க அரசு ஊழியர் சங்கம் பிரச்சாரம்

புதுக்கோட்டை, நவ.14- இளைஞர்களின் வேலை வாய்ப்பை பறிக்கும் அர சாணை எண்:56 ரத்து செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் கடந்த புதன், வியாழ னில் புதுக்கோட்டை மாவட்ட த்தில் பிரச்சாரம் நடை பெற்றது.  அரசுத் துறையில் அவுட்சோர்சிங் முறை மற்றும் ஆட்குறைப்பு நடவடிக்கையை கைவிட வேண்டும். ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்டத்தை கைவிட வேண்டும். தமிழக அரசுத் துறைகளில் உள்ள நாலரை லட்சத்திற்கும் அதிக மான காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் பிரச்சார இயக்கம் நடைபெற்றது. அரசு ஊழியர் சங்க மாநில துணைத் தலைவர் என்.நம்பிராஜன் தலைமை யில் நடைபெற்ற இந்தப் பிரச்சார இயக்கத்தில் மாநில செயலாளர் தெ.வாசுகி, மாவட்டச் செயலாளர் ஆர்.ரெங்கசாமி, அறிவியல் இயக்க மாநில செயற்குழு உறுப்பினர் அ.மணவாளன் மற்றும் சங்க நிர்வாகிகள் பாரதி, குமரேசன், சத்தி, கருப்பையா, துரை.அரங்க சாமி, மலர்விழி, அன்ன பூரணம் உள்ளிட்டோர் பங் கேற்றனர். புதன்கிழமை யன்று திருமயத்தில் நடை பெற்ற பிரச்சாரம் தொடர்ந்து அரிமளம், புதுக்கோட்டை, அன்னவாசல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடை பெற்று இலுப்பூரி நிறைவ டைந்தது.
அரியலூர்
இதே போல் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண் டம் காந்தி பூங்கா முன்பு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் பிரச்சார இயக்கம் நடைபெற்றது. மாவட்ட துணை தலைவர் என்.வேல் முருகன் தலைமை ஏற்றார். மாவட்ட செயலாளர் எம்.கே.முத்து வரவேற்றார். வருவாய்த்துறை அலுவலர் ஆர்.குமார் முன்னிலை வகித்தார். மாநில துணைத் தலைவர் எம்ஞானந்தம்பி, மாநில செயலாளர் சண்முக வேல் ஆகியோர் சிறப்புரை யாற்றினர். கருவூல அலு வலர் பி.துரைவேந்தர் நன்றி கூறினார்.

;