tamilnadu

img

பொருளாதார மேம்பாடு கருத்தரங்கம்

அறந்தாங்கி, அக்.20- புதுக்கோட்டை அறந்தாங்கி தி போர்ட் சிட்டி சார்பாக சமூக மற்றும் பொருளாதார மேம்பாடு பற்றிய கருத்த ரங்கம் ஆவணத்தாங்கோட்டை மேற்கு கிராமத்தில் நடை பெற்றது. ரோட்டரி சங்க தலைவர் விஜய் தலைமை தாங்கி னார். உடனடி முன்னாள் தலைவர் கவி கார்த்திக் வர வேற்றார்.  விழாவில் தென்னை வளர்ப்பு மற்றும் தென்னை சார்ந்த மதிப்புகூட்டு பொருட்கள் பற்றிய விளக்கமும் பயிற்சிக்கான  வழிமுறைகளையும் பீர்சேக்(வேளாண்மை வளர்ச்சி தலை வர், ரோட்டரி மாவட்டம் 3000 மற்றும் இயக்குநர் தென்னை உழவர் உற்பத்தியாளர் நிறுவனம்) சிறப்புரை ஆற்றி னார். விழாவில் சங்க உறுப்பினர்கள் இப்ராம்ஷா, விஜய குமார் மற்றும் ஆசிரியர் பாஸ்கரன், மேகலா மற்றும் ஆவ ணத்தாங்கோட்டை மேற்கு கிராமத்தினர் கலந்து கொண்ட னர். முன்னாள் தலைவர் கபார்கான் நன்றி கூறினார்.