புதுக்கோட்டை: புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் திங்கள்கிழமையன்று உடலியங்கியல் துறை சார்பாக கண்காட்சி நடைபெற்றது. கண்காட்சியினை திறந்து வைத்த மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் மீனாட்சி சுந்தரம், உடலியங்கியல் துறை பயிற்சி என்பது தற்போது அதிநவீன முறையில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் மருத்துவ மாணவர்கள் முன்னெடுத்து செய்துள்ள இந்த கண்காட்சி மிகவும் பாராட்டத்தக்கதாகும் எனக்குறிப்பிட்டார். கண்காட்சியில் உடல் உறுப்புகளின் செயல்பாட்டினை விவரிக்கும் வகையில் மாணவர்களால் மாதிரிகள் உருவாக் கப்பட்டு கற்பிக்கும் முறையை அறிமுகப்படுத்தினர். மின் தூண்டல் மூலமாக மூளை, இருதயம், கண்ணசைவு, தசை அசைவு, மூச்சு விடும் திறன் ஆகியவற்றின் செய்முறை விளக்கங்களை கம்ப்யூட்டர் கருவி கொண்டு மாணவர்கள் செய்து காண்பித்தனர். கண்காட்சியில் உடல் உறுப்புகளின் செயல்பாட்டினை சிறப்பாக வடிவமைத்த மாணவர்க ளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் உடலியங்கியல் துறை பேராசிரியரும், துணை முதல்வருமான டாக்டர் சுஜாதா, துணை கண்காணிப்பாளர் டாக்டர் வசந்தராமன், உதவி நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் ரவிநாதன் உள்ளிட்ட பேராசிரியர்களும், மருத்துவர்களும் கலந்து கொண்டனர்.