tamilnadu

img

சிபிஎம் போராட்டம் வெற்றி.... மாங்கோட்டை ஊராட்சியில் நூறுநாள் வேலையை முறையாக வழங்குவதாக உறுதி...

புதுக்கோட்டை:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தஇருந்த நூதனப் போராட்டத்தை அடுத்த நடைபெற்ற பேச்சுவார்த்தையில் புதுக் கோட்டை மாவட்டம் மாங்கோட்டை ஊராட்சியில் நூறு நாள் வேலைத் திட்டத்தில் வேலைகளை முறையாக வழங்கு
வதாக அதிகாரிகள் எழுத்துப்பூர்வமாக உறுதியளித்தனர்.புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியம் மாங்கோட்டை ஊராட்சியில் நூறுநாள் வேலைத்திட்டத்தில் முறையாக வேலை வழங்குவதில்லை என விவசாயத் தொழிலாளர்கள் குற்றம்சாட்டினர். மேலும், சாலை வசதி, தெருவிளக்கு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளும் நிறைவேற்றப்படவில்லை என ஊர் மக்கள்குற்றம் சாட்டினர். மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சியினர் தலைமையில் நூதனப் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்து துண்டுப் பிரசுரமும் வெளியிடப்பட்டது.இதனையடுத்து திங்கள்கிழமை மாங்கோட்டை ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பாக நூதனப் போராட்டம் நடத்துவதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்தலைமையில் ஏராளமானோர் குவிந்தனர். தகவலறிந்து கறம்பக்குடி வட்டார வளர்ச்சி அலுவலர் எஸ்.ரவி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தையில், நூறுநாள் வேலைத் திட்டத்தில் முறையாக வேலை வழங்குவது, புதிதாக விண்ணப்பித்துள்ள அனைவருக்கும் வேலை அட்டை வழங்குவது, நூறுநாள் திட்டத்தில் வேலை செய் யும் அனைவருக்கும் ஏடிஎம் கார்டு கிடைக்கஏற்பாடு செய்வது. ஜெஜெஎம் திட்டத்தின் மூலம் அனைத்துக் குடும்பங்களுக்கும் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பது. அனைத்து குக்கிராமங்களுக்கும் கிருமிநாசினி தெளித்து கொரோனா நோய்ப் பரவலைத் தடுப்பது என எழுத்துப்பூர்வமாக ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.போராட்டம் மற்றும் சமாதானப் பேச்சுவார்த்தையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், செயற்குழு உறுப்பினர் வி.துரைச்சந்திரன், ஒன்றியச் செயலாளர் எம்.பாலசுந்தரமூர்த்தி, மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.வடிவேல், ஊராட்சி மன்றத்தலைவர் பிரோமா ரெத்தினம். ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ஆர்.சுந்தரமூர்த்தி, ஆர்.சக்திவேல், என்.மதியழகன், கிளைச் செயலாளர்கள் எம்.கார்த்தி கேயன் மாலா. லெட்சுமி, பூங்கோதை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

;