tamilnadu

img

62 முறை டயாலிசிஸ் செய்தவருக்கு கொரோனா... கைவிரித்தது தனியார் மருத்துவமனை..... காப்பாற்றியது அரசு மருத்துவமனை

புதுக்கோட்டை:
சிறுநீரகப் பிரச்சனையால் 62 முறை டயாலிசிஸ் செய்துகொண்டவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதும் சிகிச்சை தர மறுத்து வெளியேற்றியது தனியார் மருத்துவமனை. சிறப்பான சிகிச்சையால் இளைஞரை காப்பாற்றிசாதனை படைத்தது புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை.

புதுக்கோட்டை மாவட்டம் காட்டுபாவா பள்ளிவாசல் பகுதியைச் சேர்ந்தஆரோக்கியசாமி மகன் மகேஷ் வில்லியம்ஸ்(18). கடந்த சிலமாதங்களாக உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்ட இவர் மதுரையில் உள்ள பிரபலமான தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார். சிறுநீரகப் பிரச்சனையால் இவருக்கு 62 முறை டயாலிசிஸ் செய்யப்பட்டது. மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த இவரது சிகிச் சைக்கு ஊர்ப்பொதுமக்கள் மற்றும் நன்கொடையாளர்கள் மூலமாக சுமார்5 லட்சம் வரை அந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக செலவு செய்யப் பட்டதாகக் கூறப்படுகிறது.

கொரோனா சிகிச்சையோடு டயாலிசிசும்
இந்நிலையில், மகேஷ் வில்லியம்ஸ்க்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனால், மேற்படி தனியார் மருத்துவமனையில் அவருக்கு டயாலிசிசோ, கொரோனா தொற்றுக்கான சிகிச்சையோ அளிக்க முடியாது எனநிர்வாகம் கைவிரித்துவிட்டது. இதனையடுத்து புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உட்பட்ட ராணியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு பிரத்யேகமாக டயாலிசிஸ் கருவி வரவழைத்து டயாலிசிஸ் செய்யப்பட்டது. கூடவே கொரோனா வைரஸ்க்கான சிறப்பு மருத்துவமும் மேற்கொள்ளப்பட்டது. 10 நாட்களாக தொடர்ந்து நடைபெற்ற சிகிச்சையின் பலனாக கடந்தசெவ்வாய்க்கிழமையன்று  கொரோனா
தொற்று இல்லாத நபராக மகேஷ் வீடுதிரும்பினார்.

கண்ணீர்மல்க  நன்றி தெரிவித்த இளைஞர்
மிகவும் இக்கட்டான சூழலில் புதுக் கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவர்கள் வாலிபரின் உயிரைக் காப்பாற்றியது அவரது குடும்பத்தை நெகிழ வைத்துள்ளது. இதுகுறித்து மகேஷ் வில்லியம்ஸ் கூறியபோது, கடும் சிக்கலான சூழ்நிலையில் இருந்துநான் மீண்டுவந்தது மிகவும் ஆச்சரியமாக உள்ளது. பொதுவாக அரசு மருத்துவமனை இவ்வளவு சிறப்பான கட்டமைப்பு வசதியோடு இருக்கும் என நான்நினைக்கவில்லை. இங்கு வருவதற்கு முன்பாக கூடுதல் செலவு ஆனாலும் மீண்டும் தனியார் மருத்துவமனைக்கே சென்றுவிடலாமா என யோசித்தோம். ஆனால், இங்கு உள்ள வசதிகளும், மருத்துவர்களின் சிறப்பான சிகிச்சையும், செவிலியர்களின் கனிவான உபசரிப்பும் என்னை நெகிழ வைத்துவிட்டது. சாவின் விளிம்புக்குச் சென்ற என்னை மீட்டுத்தந்த அனைவருக்கும் நன்றி என கண்ணீர்மல்க கூறினார்.

டயாலிசிஸ் தொடரலாம்
இதுகுறித்து மருத்துவக் கல்லூரிமுதல்வர் மீனாட்சிசுந்தரம் கூறும் போது, புதுக்கோட்டை ராணியார் மருத்துவமனையில் உள்ள கொரோன சிகிச்சை மையத்தில் பிறந்த பச்சிளங்குழந்தையிலிருந்து 84 வயது முதியவர் வரை பல உயிர்கள் காப்பாற்றப் பட்டுள்ளன. பல லட்சம் ரூபாய் செலவுசெய்து 62 முறை டயாலிசிஸ் செய்த ஒருவரை தனியார் மருத்துவமனை கைவிட்ட நிலையில், நாங்கள் சவாலாக எடுத்துக்கொண்டு இதில் வெற்றிபெற்றுள்ளோம். இனிவரும் காலங்களில் தொடர்ந்து அவர் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் டயாலிசிஸ் சிகிச்சை மேற் கொள்ளலாம் எனத் தெரிவித்தார்.

;