tamilnadu

img

விவசாயிகளுக்கு விரோதமான சட்டத்திருத்தங்களுக்கு கண்டனம் சட்டநகலை எரித்து விவசாயிகள் ஆவேச போராட்டம்

புதுக்கோட்டை, ஜூன் 10- மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ள கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவான, விவசாயிகளுக்கு விரோதமான விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் அத்தியாவசியப் பொருட்கள் சட்டம் திருத்தப்பட்டதைக் கண்டித்தும் இதனை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்றும் இலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது என்றும் வலியுறுத்தியும்  தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில்  ஜூன் 10 புதனன்று மாநிலம் முழுவதும் சட்டநகல் எரிப்புப் போராட்டம் நடைபெற்றது. 

புதுக்கோட்டை மாவட்டத்தில் 10 மையங்களில் பகுதிகளில் சட்டநகல் எரிப்புப் போராட்டம் புதன்கிழமையன்று நடைபெற்றது. கறம்பக்குடியில் நடைபெற்ற போராட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைச்செயலாளர் எஸ்.பொன்னுச்சாமி தலைமை வகித்தார். கந்தர்வகோட்டையில் நடைபெற்ற போராட்டத்திற்கு விவசாயிகள் சங்க மாவட்டத்தலைவர் ஏ.ராமையன் தலைமை வகித்தார். புதுக்கோட்டையில்   விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் எம்.வீரப்பன், அறந்தாங்கியில் எம்.மேகவர்ணம், ஆவுடையார்கோவிலில் எம்.எஸ்.கலந்தர், மணமேல்குடியில் கரு.ராமநாதன், குன்றாண்டார்கோவிலில் எம்.பழனிச்சாமி, அன்னவாசலில் டி.ரகுபதி, பொன்னமராவதியில் பி.ராமசாமி, திருமயத்தில் எம்.வீரமணி, அரிமளத்தில் எம்.அடைக்கப்பன் ஆகியோர் தலைமை வகித்தனர்.
நாகப்பட்டினம்
நாகை மாவட்டம், கீழையூர் கடைத்தெருவில் நடைபெற்ற போராட்டத்திற்குத் சங்கத்தின் மாநிலத் தலைவர் வி.சுப்பிரமணியன் தலைமை வகித்து,  சிறப்புரையாற்றினார். வி.சுப்பிரமணியன்  மற்றும் விவசாயிகள் சங்கத்தினர் பங்கேற்றனர்.  நாகை ஒன்றியம், சிக்கல் கடைத்தெருவில் நடைபெற்ற போராட்டத்திற்குத்  சங்கத்தின் மாவட்டத் தலைவர் எம்.என். அம்பிகாபதி தலைமை வகித்து, பேசினார். விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளரும் புதுச்சேரி ஊராட்சி மன்றத் தலைவருமான என்.வடிவேல், சிக்கல் ஊராட்சி மன்றத் தலைவர் விமலாராஜா  உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
திருக்கடையூர்
 நாகை மாவட்டம், திருக்கடையூரில் மாவட்ட செயலாளர் எஸ்.துரைராஜ்  தலைமையில் போராட்டம் நடைபெற்றது.  மாவட்ட பொருளாளர் டி.இராசையன், வட்ட செயலாளர் காபிரியேல்,வட்டத்தலைவர் பரமசிவம் உள்பட பலர் பங்கேற்றனர்.
திருவாரூர் 
திருவாரூர் மாவட்டத்தில் மூன்று மையங்களில் சட்ட நகல் எரிப்பு போராட்டம் நடைபெற்றது. திருவாரூர் பழைய பேருந்து நிலையம் எதிரில் நடைபெற்ற போராட்டத்திற்கு விவசாய சங்க மாவட்ட செயலாளர் வி.எஸ்.கலியபெருமாள் தலைமையேற்றார். மாவட்ட நிர்வாகிகள் ஜி.பவுன்ராஜ், கே.தமிழ்ச்செல்வி, தியாகு.ரஜினிகாந்த், வி.ஜெயபால் உட்பட பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட சங்க தலைவர்கள் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. 
திருச்சி 
மணப்பாறை பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சிதம்பரம் தலைமை தாங்கினார். வட்டதலைவர் வெள்ளைச்சாமி, வட்டசெயலாளர் கோபாலகிருஷ்ணன் உட்பட பலர் பேசினர்.  
சட்ட நகலை எரிக்க முயன்றவர்களை போலீசார் தடுத்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட சங்க பொருளாளர் திருநாவுக்கரசு, வட்டக்குழு உறுப்பினர் அழகர்,  சூளியாப்பட்டி பஞ்சாயத்து துணைத்தலைவர் துளசிவேல் உள்பட 13 பேரை கைது செய்தனர். தா.பேட்டை நடைபெற்ற நகல் எரிப்பு போராட்டத்திற்கு ஒன்றிய செயாளர் சேகர் தலைமை வகித்தார். போராட்டத்தில் ஈடுபட்ட மாவட்ட தலைவர் ராமநாதன், மாவட்டக்குழு உறுப்பினர் சுப்ரமணி, ஒன்றிய தலைவர் கோவிந்தசாமி, சிபிஎம் ஒன்றிய செயலாளர் காமராஜ் உள்பட 13 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருவெள்ளறையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் முருகேசன் தலைமை வகித்தார். விவசாயத்தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் சுப்ரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 
தஞ்சாவூர் 
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் தஞ்சை ரயிலடியில் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு விவசாயிகள் சங்க மாநிலச் செயலாளர் சாமி.நடராஜன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் என்.வி.கண்ணன், மாவட்டத் தலைவர் பி.செந்தில்குமார், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.தமிழ்ச்செல்வி, மாவட்டத் தலைவர் ஆர்.கலைச்செல்வி ஆகியோர் பேசினர்.  பட்டுக்கோட்டை தலைமை அஞ்சலகம் அருகில் நடைபெற்ற போராட்டத்திற்கு விவசாயிகள் சங்க தஞ்சை மாவட்ட துணைத் தலைவர் ஏ. கோவிந்தசாமி தலைமை வகித்தார். மாவட்டக்குழு உறுப்பினர் எம்.செல்வம், ஒன்றியச் செயலாளர் ஜீவானந்தம், ஒன்றிய தலைவர் வீரப்பன், முருக.சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  ஒரத்தநாட்டில் நடைபெற்ற போராட்டத்திற்கு சிபிஎம் ஒன்றிய செயலாளர் என்.சுரேஷ்குமார் தலைமை வகித்தார்.  திருவையாறு வட்டாட்சியர் அலுவலகம் அருகில் நடைபெற்ற போராட்டத்துக்குசங்க மாவட்டப் பொருளாளர் எம்.பழனிஅய்யா தலைமை வகித்தார். மாவட்டக்குழு உறுப்பினர் எம்.ராம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
குடவாசல்
குடவாசல் வி.பி. சிந்தன் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற போராட்டத்திற்கு  விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் எம்.சேகர் தலைமை வகித்தார். மாவட்ட துணைச்செயலாளர் கே.சுப்பிரமணியன்,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி, சங்கத்தின் ஒன்றிய செயலாளர் டி.ஜி.சேகர், பொருளாளர் என்.துரைமணி ஆகியோர் பேசினர். 
கும்பகோணம் 
கும்பகோணம் காந்தி பார்க் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு  தஞ்சை மாவட்ட துணை செயலாளர் என்.கணேசன் தலைமை வகித்தார். திருப்பனந்தாள் டி.ஜி ராஜேந்திரன் ,குடந்தை ஒன்றியத் தலைவர்  குணசேகரன் ,மேகநாதன் ஆகியோர் பேசினர்.

;