tamilnadu

நோய் பாதித்த நெற் பயிருக்கு இழப்பீடு வழங்கக் கோரிக்கை

புதுக்கோட்டை, ஜன.30- புதுக்கோட்டையில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டக்குழுக் கூட்டம் புதன்கிழமை நடை பெற்றது. மாவட்டத் தலை வர் ஏ.ராமையன் தலைமை வகித்தார். மாநிலச் செயலா ளர் சாமி.நடராஜன் மாநி லக்குழு முடிவுகளை விளக்கிப் பேசினார். மாவட் டச் செயலாளர் எஸ்.பொன் னுச்சாமி மற்றும் நிர்வாகிகள் சா.தோ.அருணோதயன், பி.வீராச்சாமி உள்ளிட்ட மாவட்டக்குழு உறுப்பி னர்கள் பங்கேற்றனர். மாவட்டத்தில் ஆயிரக்க ணக்கான ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள் ளது. நெற்பயிர் நல்ல விளைச்சல்கண்டு பால் பிடிக்கும் தருணத்தில் திடீ ரென இடைப்பழம், ஆனைக் கொம்பன், கொலைநோய் ஆகிய நோய்கள் தாக்கியுள் ளன. இதனால், பல நூற்றுக் கணக்கான ஏக்கரில் விவசா யிகள் பாடுபட்டு வளர்த்த நெற்பயிர் நாசமாகியுள்ளன. கடுமையாக உழைத்து, கூடு தலாக செலவு செய்து  வளர்த்த பயிர் நாசமானதால் விவசாயிகள் கடும் மன வேதனையில் சிக்கத் தவித்து வருகின்றனர்.  எனவே, மாவட்ட ஆட்சி யர் உடனடியாக பாதிக்கப் பட்ட நெல்வயல்களைப் பார்வையிட்டு பாதிப்புக் தகுந்த இழப்பீடும், காப்பீட்டுத் தொகையும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், மேற்கண்ட கோரிக் கைகள் அடங்கிய மனுவும் ஆட்சியர் பி.உமா மகேஸ்வரி யிடம் வழங்கப்பட்டது.

;