tamilnadu

img

கொங்கு நாடு என பாஜக குழப்புகிறது... கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்.... கே.பாலகிருஷ்ணன் எச்சரிக்கை....

புதுக்கோட்டை:
கொங்கு மண்டலத்தை தனியாகப்பிரித்து யூனியன் பிரதேசமாக மாற்றவேண்டும் என்று பாஜகவினர் மறைமுகமாக தொடர்ந்து பரப்பி வருவது ஆபத்தானது. தமிழ்நாட்டை துண்டாடிபாஜக கொல்லைப்புறமாக நுழையமுயற்சிக்க நினைத்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் எச்சரித்துள்ளார்.

புதுக்கோட்டையில் சனிக்கிழமையன்று அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:

கூட்டுறவுத்துறை மாநிலங்களின் கட்டுப்பாட்டில் உள்ளது, மாநில அரசுகள் சம்பந்தப்பட்டுள்ள ஒரு துறையைகைப்பற்றுவதற்கு ஒன்றிய அரசு ஒரு துறையை அவசியம் இல்லாமல் உருவாக்கியுள்ளது, மாநிலங்களின் உரிமைகளை பறிக்கும் இச்செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது, ஏற்கனவே பல விசயங்களில் மாநிலங்களின் உரிமைகளை ஒன்றிய அரசு தொடர்ந்து பறித்து வருகிறது. மேகதாது அணை கட்டும் விவகாரத்தில் தமிழக முதலமைச்சர் சட்டமன்றத்தில் உள்ள அனைத்து கட்சிகளையும் கூட்டும் செயல் நல்ல ஒரு நடவடிக்கை, குடிநீர் தேவைக்காக மேகதாது அணை கட்டுவதாக கூறுவது உண்மைக்கு புறம்பானது. வரக்கூடியதேர்தலில் ஓட்டு வாங்க வேண்டும் என்ற நோக்கத்தோடு கர்நாடக பாஜகஅரசு இதுபோன்ற செயலில் ஈடுபடுகின்றது.இந்த அணை கட்டுவதற்கு மேகதாதுப் பகுதியில் உள்ள பழங்குடியின் மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு வருகின்றனர்.

தமிழ்நாட்டில் இருந்து கொங்கு பகுதியை தனியாக பிரித்து யூனியன் பிரதேசமாக மாற்ற வேண்டும் என்றுபாஜகவினர் தொடர்ந்து பரப்பி வருவது ஆபத்தானது. வன்மையாகக் கண்டிக்கத்தக்கது, மொழிவாரியாக பிரிக்கப்பட்ட தமிழ்நாட்டில் கொல்லைப்புறமாக பாஜக நுழைய நினைத்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும். அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து பாஜகவின் திட்டத்தை முறியடிக்க வேண்டும். ஒன்றிய இணையமைச்சராக எல்.முருகன் பதவியேற்றது குறித்த ஒன்றியஅரசின் செய்திக்குறிப்பில் கொங்குநாடு என தேவையில்லாமல் குறிப்பிடப் பட்டிருந்தது.இந்நிலையில் தினமலர் ஏடு ஜூலை 10 அன்று கொங்கு நாடுஎன்று தலைப்பிட்டு தலைப்புச் செய்தியாக வெளியிட்டுள்ளதில் கொங்கு பகுதியை தனியாகப் பிரித்து யூனியன் பிரதேசமாக மாற்ற ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது என்று கூறியுள்ளது.மேலும் பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தன்னுடையமுகநூல் பக்கத்தில் கொங்குநாடுஎன்பதற்கு இலக்கிய ஆதாரம் உள் ளது என்று உளறிக்கொட்டியுள்ளார்.இந்த போக்கு ஆபத்தானது. மொழிவழியில் அமைந்த தமிழ்நாட்டை சிதைக்கமுயல்வதை முறியடிக்க அனைத்துக் கட்சிகளும் ஒன்றுபட வேண்டும். 

அதிமுக அரசு பொதுமக்களை நிர்க்கதியாக விட்டுவிட்டு சென்றுள்ளது. இந்நிலையில் கொரோனாவைகட்டுப்படுத்த போர்க்களத்தில்இருந்து போராடுவதை போல் தமிழக அரசும் முதலமைச்சரும் போராடிகொரோனாவை கட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். இதை போல் மூன்றாவது அலை வந்தால் அதையும் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரி - குண்டாறு இணைப்பு திட்டத்தை விரைந்து செயல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், தற்போது ஊரடங்கில் 95 சதவீதம் தளர்வுகளை அறிவித்துள் ளது. இருப்பினும் ஊரடங்கு கொரோனாமுழுமையாக சரியாகும் வரை தொடரவேண்டும். தமிழக அரசு ஊரடங்கை நீட்டிப்பது வரவேற்கத்தக்கது.நேரடி நெல் கொள்முதல் நிலையம் பற்றி வரும் புகார்கள் குறித்து அரசுநேரடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்பிரச்சனையில் இடைத்தரகர்களின் தலையீட்டை தடுக்க வேண்டும் என்று முதல்வரிடம்வலியுறுத்துகிறேன். ஒரு மூட்டைக்கு 40 ரூபாய் கமிஷன் கொடுக்க வேண்டியிருப்பதால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். கடந்த ஆட்சியில் இதைப் பலமுறை சுட்டிக் காட்டியும் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை.திமுக அரசு கொடுத்த வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்பதுதான் எங்களின் கோரிக்கையுமாகும். ஆனால் ஆட்சிக்கு வந்து இரண்டே மாதத்தில் அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றிட முடியாது.

ஒன்றிய அரசுதான் பெட்ரோல், டீசல் மீது அதிகமான வரிகளை விதித்துள்ளது. தமிழகத்திற்கு வருவாய் இழப்பை சரிக்கட்டும் வரை பெட்ரோலியப் பொருள் மீதான மாநில வரியை குறைக்க முடியாது என்று மட்டுமே மாநில நிதி அமைச்சர் கூறியுள்ளார்.கடந்த ஆட்சியில் யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் எங்கள் நிலைப்பாடு.இதில் சமரசத்திற்கு இடமில்லை.இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது மாநிலக்குழு உறுப்பினர் கள் எம்.சின்னத்துரை எம்எல்ஏ., ஐ.விநாகராஜன், மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் ஆகியோர் உடனிருந்தனர்.

;