அறந்தாங்கி, ஆக.20- புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி கல்வி மாவட்ட அளவிலான குறுவட்ட கூடைபந்தாட்டப் போட்டிகள் எல்.என்புரம் செலக்சன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளா கத்தில் நடைபெற்றது. இதில் 10க்கும் மேற்பட்ட பள்ளிகள் கலந்து கொண்டன. செலக்சன் பள்ளி தாளாளர் கன்னை யன் தலைமையில் கூடை பந்தாட்டத்தை மாவட்ட விளை யாட்டு கல்வி ஆய்வாளர் தங்கராஜ் துவக்கி வைத்தார். ரோட்டரி மாவட்ட துணை ஆளுநர் கராத்தே கண்ணை யன் வாழ்த்துரை வழங்கினார். அறந்தாங்கி ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் பீர்சேக், செயலாளர் வீரையா, குயிண்டன் உட்பட பலர் கலந்து கொண்டனர். 19 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில் அமிர்தா வித்யா பள்ளி முதலிடமும் 17 வயதுக்குட்பட்டோருக்கான ஆண்கள் பிரிவு போட்டியில் செலக்சன் பள்ளி முத லிடமும் 14 வயதுக்குட்பட்டோருக்கான ஆண்கள் பிரிவு போட்டியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முதலிட மும் பெற்றது முன்னதாக செலக்சன் பள்ளி முதல்வரும் ரோட்டரி கிளப் தலைவருமான கசுரேஷ்குமார் வர வேற்றார். நிறைவாக உடற்கல்வி ஆசிரியை ஜஸ்வர்யா நன்றி கூறினார்.