tamilnadu

img

சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழா

அறந்தாங்கி, மார்ச் 1- புதுக்கோட்டை அறந்தாங்கி யில், திசைகள் மாணவ வழிகாட்டு அமைப்பின் பதினைந்தாம் ஆண்டு விழா மற்றும் பல்வேறு துறைகளில் சாதனை பணிபுரிந்த வர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு இந்திய மருத்துவ கழகம் அறந் தாங்கி கிளை தலைவர் டாக்டர் லெட்சுமி நாராயணன் தலைமை  தாங்கினார். வர்த்தக சங்கத் தலை வர் வரதராஜன், இந்திய மருத் துவ கழக செயலாளர் டாக்டர், அருள்மணி, அறந்தாங்கி தி போர்ட் சிட்டி ரோட்டரி தலை வர் டாக்டர் விஜய் சிவானந்தம், வட்டார வள மைய மேற்பார்வை யாளர் சிவயோகம் முன்னிலை வகித்தனர். திசைகள் அமைப்பின் பொரு ளாளர் முகமது முபாரக் வர வேற்புரையாற்றினார். அமைப் பின் தலைவர் டாக்டர் தெட்சிணா மூர்த்தி அறிமுக உரையாற்றி னார். அறந்தாங்கி மாவட்ட கல்வி அலுவலர் திராவிடச் செல்வம் கலந்து கொண்டார். ஏம்பல் டாக் டர் பழனிவேல்ராஜா, மங்களம் ஸ்டோர் ஷேக் அப்துல்லா சகோ தரர்கள், சிக்ரி விஞ்ஞானி முனை வர் சரஸ்வதி, செரியலூர் இனாம் ஊராட்சி தலைவர் ஜியாவுதீன், கவிஞர் ஜீவி உள்ளிட்டோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விரு தும், அரசுப் பள்ளி ஆசிரியர்கள் 20 பேருக்கு சிறந்த ஆசிரியர் சிஜெஆர் மணி விருதும், சிறந்த சமூக சேவை செய்யும் இளை ஞர்கள் 15 பேருக்கு அப்துல் கலாம் விருதும், 6 அமைப்பு களுக்கு சிறந்த அமைப்புக்கான திசைகள் விருதும், பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு மாண வர் விருதும் வழங்கப்பட்டது. விழாவில் தமுஎகச கவிவர் மன், கராத்தே கண்ணையன், வழக்கறிஞர் வெங்கடேசன், தெய் வக்கனி, தலைமையாசிரியர் தெய்வக்கனி, மணமேல்குடி காவல் உதவி ஆய்வாளர் ஜவ ஹர், சேக் சுல்தான், கராத்தே பிரதார்ஸ் தலைவர் சுப்பிரமணி யன், அறந்தாங்கி ரோட்டரி சங்கத் தலைவர் சுரேஷ்குமார், டைமன் பஷீர், சுப்பிரமணியபுரம் முன் னாள் ஊராட்சி தலைவர்கள் சோமசுந்தரம், அண்ணாதுரை, கூட்டுறவு சங்கத் தலைவர் செல்லையா, விஜயபுரம் முன் னாள் ஊராட்சி தலைவர் ராம லிங்கம், முபாரக் அலி உள் ளிட்டோர் வாழ்த்துரை வழங்கி னார்கள். திசைகள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சேது புக ழேந்தி நன்றியுரை ஆற்றினார்.

;