மும்பை, மார்ச் 13 - மும்பை பங்குச்சந்தை வியாழனன்று 2,919 புள்ளி கள் சரிவடைந்த நிலை யில், வர்த்தக இறுதி நாளான வெள்ளியன்று, ஆரம்பமே அதிர்ச்சியாக இருந்தது. சென்செக்ஸ் 3150 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது. அதிகபட்சமாக சென்செக்ஸ் 3177 புள்ளி கள் சரிந்து 29600-க்கு கீழே போனது. நிப்டியும் 966 புள்ளிகள் சரிந்து 8624 புள்ளிகளுக்கு இறங்கியது. இதனால், 2009-ஆம் ஆண்டுக்குப் பிறகு, முதன்முறையாக பங்கு வர்த்தகமே, சுமார் 45 நிமிடங்களுக்கு நிறுத்தப்பட்ட சம்பவம் அரங்கேறியது.