tamilnadu

img

வருவாய் இழப்பு ரூ.10 லட்சம் கோடி.... அடுத்த மாத ஊதியத்திற்கு அரசுகளிடம் பணமில்லை!

நாக்பூர்:
கொரோனா பெருந்தொற்றால் நாட்டின்பொருளாதாரம் மோசமாக பாதிக்கப்பட் டுள்ளதாகவும், அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி அளவிற்கு வருவாய் இழப்பு ஏற்படும்என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கூறியுள்ளார்.பாஜக சார்பில் நடைபெற்ற ‘ஜன் சம்வாத்’ (மக்களின் குரல்) என்ற காணொலி பிரச்சாரத்தில் நாக்பூரில் இருந்தவாறு மத்திய அமைச்சர் நிதின் கட்காரி உரையாற்றியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

கொரோனா வைரஸ் பெருந்தொற்றால்நாட்டின் பொருளாதாரம் வெகுவாகப் பாதிக்கப்பட்டு உள்ளது. அரசுக்கு ஏறக்குறைய ரூ.10 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்படு்ம் என எதிர்பார்க்கிறோம். பலமாநில அரசுகளிடம் அடுத்த மாதம் ஊதியம் கொடுப்பதற்கு பணம் இல்லாத சூழல்தான் நிலவுகிறது. ஆனாலும், இந்தசூழலை அரசு திறம்படக் கையாண்டு வருகிறது.ரூ. 200 லட்சம் கோடி ஜிடிபி கொண்டநம்நாட்டில் பொருளாதாரத்தை மீட்க ரூ.20 லட்சம் கோடி அளவுக்கு விவசாயிகள், தொழிலாளர்களுக்கு பொருளாதார சிறப்புத்திட்டத்தை அறிவித்துள்ளோம். இதில், ரூ.10 லட்சம் கோடி வருவாய் இழப்புஎன்றால் மத்திய அரசு இக்கட்டான சூழலைத்தான் எதிர்கொண்டு வருகிறது.

கொரோனா வைரஸுக்கு தடுப்பு மருந்து விரைவில் கண்டுபிடிக்கப்படும் என்று நம்புகிறேன். அதுவரை நாம் தொற்றுடன் போராட வேண்டியது இருக்கும். தேசியவாதம் என்பதுதான் பாஜகவின் முன்னுரிமை, சித்தாந்தம். இந்த விஷ
யத்தை முன்னிறுத்திதான் மாவோயிஸ்ட்களையும், தீவிரவாதிகளையும் மோடிஅரசு அணுகுகிறது, இரும்புக் கரம் கொண்டு அடக்குகிறது.முதல்முறையாக மோடி தலைமையில் பாஜக அரசு அமைந்தபோது, மாவோயிஸ்ட்களையும், தீவிரவாதிகளையும் துணிச்சலுடன் அடக்கியது. இதற்கு முன்வந்த அரசுகளால் அதைச் செய்யமுடியவில்லை.காஷ்மீருக்கான சிறப்பு அதிகாரம் அளிக்கும் 370 பிரிவு ரத்து, முத்தலாக் ரத்து, ராமர் கோயில் கட்டுவதற்கு தடைகளை அகற்றியது என மோடி அரசின் சாதனைகள் ஏராளம்.இ்வ்வாறு நிதின் கட்காரி பேசியுள்ளார்.

;