tamilnadu

img

இந்து மதம் பிறப்பிலேயே பேதம் பிரிக்கிறது.. அம்பேத்கரைப் போன்று நானும் புத்தமதம் தழுவுவேன்!

நாக்பூர்:
அண்ணல் அம்பேத்கரைப் பின் பற்றி, தானும் புத்த மதத்திற்கு மாறுவதற்கான நேரம் வரும் என்று பகுஜன்சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கூறியுள்ளார்.பிறப்பின் அடிப்படையில் உயர்வுதாழ்வை தீவிரமாக நடைமுறைப் படுத்தி வரும் இந்து மதத்திற்கு அதிர்ச்சிவைத்தியம் கொடுக்கும் வகையில், டாக்டர் அம்பேத்கர், கடந்த 1956-ஆம் ஆண்டு, அக்டோபர் 14-ஆம் தேதி மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் பல ஆயிரக்கணக்கானோருடன் புத்த மதத்திற்குமாறினார். இந்துவாக பிறந்தது என்னுடைய விருப்பத்தின்பாற் பட்டது இல்லை.  ஆனால், இந்துவாக இறக்க மாட்டேன்என்று முன்னதாகவே அம்பேத்கர் கூறியிருந்தார். அதனை நடத்தியும் காட்டினார்.இந்நிலையில்தான், 2 நாட்களுக்கு முன்பு நாக்பூரில் நடைபெற்ற தேர்தல்பிரச்சாரக் கூட்டத்தில் பேசியிருக்கும் மாயாவதி, தானும் “அம்பேத்கரைப் போன்று புத்த மதத்துக்கு கண்டிப்பாகமாறுவேன்” என்று கூறியுள்ளார். அதற்கு, தகுந்த நேரம் வர வேண்டும் என்றும் அப்போது தான் மட்டுமன்றி நாடு முழுவதும் அம்பேத்கரை பின்பற்றும் பல்லாயிரக்கணக்கான மக்களுடன் புத்த மதத்திற்கு மாறிதீட்சை பெறுவேன் என்றும் மாயாவதி தெரிவித்துள்ளார்.அம்பேத்கர் உடனடியாக மதம் மாறும் முடிவை எடுக்கவில்லை; இந்து மதத்தால் அவமானப்படுத்தப்பட்ட காரணத்தாலேயே, புத்த மதத்திற்கு மாறியதாகவும் மாயாவதி குறிப்பிட்டுள்ளார்.

;