tamilnadu

img

கடவுள் சிவன் பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்!

பாட்னா:
கடவுள் அனுமன் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் என்று உ.பி. பாஜக முதல்வர் ஆதித்யநாத் பேசியிருந்த நிலையில், கடவுள் சிவன் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர் என்று பீகார் பாஜக அமைச்சர் பிரிஜ் கிஷோர் பிந்த் ‘போட்டி’யில் இறங்கியுள்ளார்.
பீகார் மாநில புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள பாகு சவுகானுக்கு, தலைநகர் பாட்னாவில் புதன்கிழமையன்று பாராட்டு விழா நடைபெற்றது. பீகார் துணைமுதல்வர் சுஷில் குமார் மோடி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியில் பேசுகையில்தான், அம்மாநில பாஜக அமைச்சரான பிரிஜ் கிஷோர் பிந்த், “கடவுள்களில் உயர்ந்தவரான மகாதேவ் (சிவன்) சமூகத்திலும், கல்வியிலும் பிற்படுத்தப்பட்ட பிரிவாக இருக்கும் ‘பிந்த்’ சாதியைச் சேர்ந்தவர்” என்று குறிப்பிட்டுள்ளார். 

இவரின் பேச்சைக் கேட்டு, மேடையில் அமர்ந்திருந்த ஆளுநர், துணை முதல்வர் உள்ளிட்ட பாஜக தலைவர்களே அதிர்ச்சி அடைந்துள்ளனர். பிரிஜ் கிஷோர் மேடையிலிருந்து இறங்கி வந்த பிறகு, பத்திரிகையாளர்களும் அவரைச் சூழ்ந்துகொண்டு கேள்விகளை எழுப்பியுள்ளனர். “சிவன் பிற்படுத்தப்பட்டவர் என்று கூறுகிறீர்களே அது உண்மைதானா?” என்ற அவர்களின் கேள்விக்கு “நான்சிவ புராணத்தில் என்ன குறிப்பிட்டுள்ளதோ அதைத்தான் கூறினேன். அதில் கடவுள் சிவன் பிந்த் 
சமூகத்தைச் சேர்ந்தவர் என்று கூறப்பட்டுள்ளது. நூலை எழுதி யிருப்பது வரலாற்று அறிஞர்(!) வித்யாதர் மகாஜன்” என்று ஆதாரங்களையும் அள்ளி வீசியுள்ளார்.மேலும், “கடவுள் ராமர் சத்ரியகுலத்தைச் சேர்ந்தவர் என்று கூறுகிறார்கள்; கடவுள் கிரு ஷ்ணர் யாதவ குலத்தைச் சேர்ந்தவர் என்று கூறுகிறார்கள்; அப்படிஇருக்கும்போது, சிவன் பிந்த் சமூகத்தைச் சேர்ந்தவராக இருக்க முடியாதா?” என்று பதில் கேள்வி எழுப்பியும், அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தியுள்ளார்.

;