சிபிஎம் கண்டனம்
தஞ்சாவூர், ஜூன் 2- தஞ்சையில், வீட்டு வேலைக்கு என வடமாநிலத்தைச் சேர்ந்த பெண்ணை அழைத்து வந்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய கொடூரம் அரங்கேறி உள்ளது. இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் கோ.நீலமேகம் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யவும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உரிய சிகிச்சை, இழப்பீடு வழங்கவும் வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் கோ.நீலமேகம் தெரிவித்ததாவது, “மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 22 வயது மதிக்கத்தக்க இளம் பெண்ணை தஞ்சைக்கு வீட்டு வேலைக்கு என அழைத்து வந்துள்ளனர்.
கடந்த சில மாதங்களாக அவரை வீட்டில் அடைத்து வைத்து அடித்து சித்ர வதை செய்து பாலியல் வன்புணர்ச்சியில் ஈடு பட்டுள்ளனர். இந்த அபலைப் பெண் தற்போது கர்ப்பம் தரித்து உள்ளதாக தெரிகிறது. மேலும், தொடர்ந்து அவரை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கி உள்ளனர். இந்நிலையில் அந்தப் பெண்ணை உடல் முழுவதும் வெளி மற்றும் உள் காயங்களு டன் காரில் ஏற்றி செங்கிப்பட்டி அருகில் ஜூன் 1-ஆம் தேதி திங்கள்கிழமை அன்று காலை 10 மணி அளவில் சாலையில் வீசிவிட்டு சென்றுள் ளனர். அந்தப்பெண் தள்ளாடியபடியே செங்கிப்பட்டி கடைத்தெருவுக்கு நடந்துவந்து சேர்ந்துள்ளார். அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தோழர்கள், விவசாய சங்கத் தோழர்கள், மாதர் சங்கத்தை சார்ந்தவர்கள், மயக்கமடைந்து சோர்ந்து விழுந்த பெண்ணை மீட்டு, காவல் துறைக்கு தகவல் கொடுத்து, தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இதனை அடுத்து காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் குற்றவாளி யார் என தெரியவந்துள்ளதாக கூறப்படு கிறது. குற்றவாளியை அடையாளம் கண்டுள்ளதாகவும் விரைவில் கைது செய்வ தாகவும் காவல்துறையினர் தெரிவித்து ள்ளனர். அந்தப் பெண் காவல்துறை விசாரணையில், தன்னைப் போன்றே தமி ழகத்தை சேர்ந்த மேலும் மூன்று பெண் களையும் அடைத்துவைத்து பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியதாக தெரிவித்துள்ளார். மேலும், தன்னை நான்கு பேர் வெள்ளை காரில் ஏற்றிச்சென்று செங்கிப்பட்டி அருகில் வீசி விட்டுச் சென்றதாக தெரிவித்துள்ளார்.
எனவே மாவட்ட காவல்துறை துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்வதுடன், அவர்களுடன் தொடர்புடைய மற்றவர்களையும் கைது செய்ய வேண்டும். உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும். குற்றவாளிகள் அனைவரும் தண்டிக்கப்பட உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும். மேலும் பாதிக்கப்பட்ட பெண் வட மாநிலத்தைச் சேர்ந்தவர். எவ்வித ஆதரவும் இல்லாத நிலையில், தமிழக அரசும் தஞ்சை மாவட்ட நிர்வாகமும் அவருக்கு உரிய உயர் மருத்துவ சிகிச்சையும், மனநல ஆற்றுப்படுத்துதல் சிகிச்சையும் அளித்திட வேண்டும். மேலும் வழக்கு முடியும் வரை உணவு, இருப்பிட வசதி அளித்திட வேண்டும். அவருக்கு உரிய இழப்பீட்டை தமிழக அரசு வழங்க வேண்டும்” என்றார்.
செங்கிப்பட்டியில் சந்திரபோஸ், மலர்கொடி, தமிழ்ச்செல்வன் மற்றும் தோழர்கள் களத்தில் இறங்கி பெண்ணை மீட்டுள்ளனர். தகவலறிந்து, தமிழ்நாடு விவ சாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் என்.வி. கண்ணன், மாதர் சங்க மாவட்டச் செய லாளர் எஸ். தமிழ்ச்செல்வி ஆகியோர் செங்கிப்பட்டி சென்று, அவரை மீட்டு தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் சேர்த்தனர்.
உடனிருந்து கவனிப்பு
மாதர் சங்க மாவட்டத் தலைவர் ஆர்.கலைச்செல்வி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எம்.மாலதி, வனரோஜா, வசந்தி, பார்வதி உள்ளிட்ட தோழர்கள் உடனிருந்து கவனித்து வருகின்றனர். சிஐடியு மாவட்டச் செயலாளர் சி.ஜெயபால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆறுதல் கூறியுள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் கோ.நீலமேகமும் மருத்துவ மனை சென்று, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆறுதல் கூறி, மருத்துவர்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகளை சென்று சந்தித்து உயர் சிகிச்சையும், உரிய நடவடிக்கையும் எடுக்க வலியுறுத்தி உள்ளார்.
தஞ்சையில் வடமாநில பெண்களை மட்டும் இன்றி தமிழகத்தைச் சேர்ந்த இளம் பெண்களையும், வீட்டு வேலை, அலுவலக வேலை என அழைத்து வந்து மிரட்டி, பாலியல் தொழிலில் ஒரு கும்பல் ஈடுபடுத்தி வருவ தாகக் கூறப்படுகிறது. இதற்காக தனி வீடுகள், அபார்ட்மெண்ட், குளிரூட்டப் பட்ட மொபைல் வேன்கள் பயன்படுத்தப்படுவ தாகவும் கூறப்படுகிறது. எனவே, மாவட்ட நிர்வாகம், மாவட்ட காவல்துறை முறையாக விசாரணை நடத்தி குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து எஸ்.தமிழ்செல்வி நிருபர்களிடம் கூறியதாவது;
அந்த பெண் உடல் முழுக்க காயமாக இருந்தது. முகம், கண் உள்ளிட்ட பகுதிகள் வீங்கியிருந்தது. நாங்கள் ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்த இடத்திற்கு வந்தார். அவரிடம் விசாரிக்க, அந்த பெண் இந்தி மட்டுமே பேசுகிறார். உறவினர்கள் பெங்களூரில் இருப்பதாக கூறுகிறார். இது தொடர்பாக செங்கிப்பட்டி காவல்துறையில் புகார் அளித்துள்ளோம். அந்த பெண் வைத்திருந்த பையில் 48 ஆயிரம் ரூபாய் இருந்தது. அதனால் இதனை நிச்சயம் பணம் படைத்தவர்கள் தான் செய்திருக்க வேண்டும். அந்த பெண்ணை பாலியல் ரீதி யாக தொடர்ந்து துன்புறுத்தி வந்தவர் களையும், தாக்கியவர்களையும் உடனடி யாக கைது செய்ய வேண்டும். இல்லை யென்றால் மாதர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபடுவோம்” என்றார்.