சென்னை, ஏப்.3- அரசு மருத்துவர்களுக்கு அளித்துள்ள சிறப்பு சலுகை தங்களுக்கும் அளிக்க வேண்டும் என பயிற்சி மருத்துவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கம் மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு கோரிக்கை மனு ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், கோவிட்-19 நோய் சிகிச்சைக்காக, எந்தவித உத்திரவாதமுமின்றி பயிற்சி கால பணி நீட்டிப்பு செய்யப்பட்டிருக்கும் பயிற்சி மருத்துவர்களின் கோரிக்கைகள் தெரி விக்கப்பட்டுள்ளன.
2014 ஆம் ஆண்டு மருத்துவக்கல்லூரியில் சேர்ந்த நாங்கள், அரசு ஒப்பந்தத்தின் படி 2020 மார்ச் 28ஆம் தேதியுடன் எங்களுடைய பயிற்சி மருத்துவத்தை முடித்து இருக்கி றோம். மேலும் ஒரு மாதம் நாங்கள் கோவிட்-19 க்கான சிகிச்சை, தடுப்பு பணிக்காக, பணி நீட்டிப்பிற்கு உள்ளாகி இருக்கிறோம். நாட்டின் இக்கட்டான சூழலை கருத்தில் கொண்டு, நாங்களும் தொடர்ந்து 2 நாள்க ளாக தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் பணியில் உள்ளோம். எங்களின் கோரிக்கை களை அரசு உடனே ஏற்று நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோவிட்-19 என்னும் கொள்ளை நோயின் பரவலை தடுப்பதற்கான பணியில் ஈடு பட்டுள்ள பயிற்சி மருத்துவர்களுக்கு தேவை யான, சுய பாதுகாப்பு உபகரணங்க ளும், முகக் கவசங்களும், ஹேஷ்மேட் ஷூட்ஸ், கை சுத்தம் செய்யும் கிருமி நாசினிகளும் தேவை யான அளவில் அனைவருக்கும் எவ்வித தட்டுப்பாடின்றி கிடைக்க வழிவகை செய்யு மாறு தமிழ்நாடு அரசிடமும், கல்லூரி நிர்வா கத்திடமும் கேட்டுக் கொள்கிறோம். பயிற்சி மருத்துவர்களுக்கு, பயிற்சி நிறைவு சான்றி தழை எந்தவித காலதாமதமின் றியும், எவ்வித எதிர்மறை கருத்துக்களின்றியும் நியமனம் செய்யப்பட்ட பயிற்சி கால அளவு முடிந்த நாள் வரை வழங்க வேண்டும்.
கோவிட்-19 கொள்ளை நோயினால் மருத்துவமனையில் ஏற்பட்ட நெருக்கடி நிலையின் போது 2014 ஆம் ஆண்டு பயிற்சி மருத்துவர் கள் பணியாற்றியதை பாராட்டும் வகையில், பயிற்சி நிறைவு சான்றி தழில் மேற்கோள் காட்ட வேண்டும் (அல்லது) அதற்கான சிறப்பு சான்றிதழை தனியாக கல்லூரி நிர்வாகத்திடம் வழங்க வேண்டும். இந்த பணிக்கால நீட்டிப்பின் போது தகுந்த ஊதியமும், தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள சுகாதார ஊழியர்களுக்கான சிறப்புச் சலுகை களும் எங்களுக்கும் வழங்க வழிவகை செய்ய வேண்டும்.
இந்த நெருக்கடி நிலையின் போது பயிற்சி மருத்துவர்கள் ஆற்றிய சேவையை கருத்தில் கொண்டு, உணவிற்காகவும்? தங்குவதற்கா கவும் எங்கள் ஊதியத்திலிருந்து எவ்வித பிடித்தம் செய்யக்கூடாது. 2014ஆம் ஆண்டு பயிற்சி மருத்துவர்களை, கோவிட்-19 அவசர, நெருக்கடி நிலையின் போது மட்டும் பணி யில் அமர்த்து வதை கல்லூரி நிர்வாகத் திடம் உறுதி செய்ய வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளனர்.
கோவிட்-19 தொற்று பரவல் இன்னும் சில மாதங்கள் நீடிக்க வாய்ப்புள்ளதால் அரசு மருத்துவ அலுவலர்களான மருத்துவ பணி யாளர் தேர்வு, முதுநிலை மருத்துவ மாண வர்கள் சேர்க்கை 2021 தேர்வு ஆகியவற்றை ஒத்தி வைக்குமாறும் அல்லது தனி இட ஒதுக்கீடு அல்லது குறிப்பிட்ட சதவீதம் கூடுதல் மதிப்பெண்ணை தர வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசிடம் கோரிக்கை விடுப்பதாக தெரிவித்துள்ளனர்.