கோவை, ஆக. 1- பதினொன்றாம் வகுப்பு இறுதிதேர்வில் மதிப்பெண் குறைந்ததால் மனமுடைந்த பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை கொண்ட சம்பவம் கோவையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம், ரத்தினபுரி சுப்பைய கவுண்டர் வீதியில் வசித்து வருபவர் செந்தில் குமார்(49). இவரது மகள் சுவாதி (17). இவர் ராம்நகர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்தார். சுவாதி பொதுத்தேர்வு எழுதியிருந்த நிலையில், வெள்ளியன்று தேர்வு முடிவுகள் வெளியானது.தேர்வில் குறைந்த மதிப் பெண்கள் பெற்றதால் மனமுடைந்த நிலை யில் காணப்பட்ட மாணவி சுவாதி தனது அறைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் நீண்ட நேரமாகியும் சுவாதி அறையை விட்டு வெளியே வராததால் சந்தேகம் அடைந்த சுவாதியின் பெற்றோர் கதவை உடைத்து பார்த்தபோது சுவாதி தூக்கு போட்டு தற் கொலை செய்து கொண்டது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து மாணவியின் பெற்றோர்கள் ரத்தினபுரி காவல் நிலையத் திற்கு அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரி சோதனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதிப்பெண் குறைவாக பெற்றதன் காரண மாக பள்ளி மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தி யது.