tamilnadu

img

“புகையில்லா போகிப்பண்டிகை”

பள்ளிக்கல்வித்துறை வேண்டுகோள்

சென்னை, ஜன. 10- போகிப் பண்டி கையை புகையில்லா பண்டி கையாகக் கொண்டாட வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.  இது தொடர்பாக வெளி யிடப்பட்டுள்ள சுற்றறிக்கை யில், போகிப் பண்டிகையின் போது பழைய குப்பைகள், பிளாஸ்டிக் பொருட்கள், டயர் உள்ளிட்டவற்றை எரிப்  பதைத் தவிர்க்க வேண்டும்  என்று அறிவுறுத்தப் பட்டுள்ளது. பழைய பொருட்களை எரிக்கும்போது அதில் இருந்து வெளியாகும் டயாக்ஸின், ஃப்யூரன் நச்சு  வாயுக்கள் உயிரினங்க ளுக்கு சுவாச நோயை உண்டாக்கும் என்பதால் எரிப்  பதை கைவிட வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. அனைத்துப் பள்ளிகளும் புகையில்லா பொங்கல் பற்றிய விழிப்புணர்வை மாணவர்களுக்கு ஏற்ப டுத்தவும் பள்ளிக்கல்வித் துறை சார்பில் அறிவு றுத்தப்பட்டுள்ளது.

;