tamilnadu

img

அதிமுக பெண் கவுன்சிலர் தாய்-மகனுடன் மீட்பு

சென்னை,ஜன.16- கடத்தப்பட்ட அதிமுக கவுன்சிலர் பூங்கொடி, அவரது மகன் நிஷாந்த், தாய் வசந்தி ஆகியோரை காவல்துறையினர் மீட்டனர்.  திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே உள்ள மத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கோட்டி. திருப்பூரில் ஆடை ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வரு கிறார். இவரது மனைவி பூங்கொடி. இவர்களது நான்கு மாத குழந்தை நிஷாந்த். நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் திருத்தணி ஒன்றியம் 2-வது வார்டில் பூங்கொடி அதி முக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். திருத்தணி ஒன்றியத் தலைவர், துணைத்தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் கடந்த 11 ஆம் தேதி நடைபெறாமல் ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் கவுன்சிலர் பூங்கொடி அவரது  மகன் நிஷாந்த், தாய் வசந்தி ஆகியோர் கடத்தப்பட்ட னர். இது குறித்து பூங்கொடியின் கணவர் கோட்டி,  கடந்த 10 ஆம் தேதி திருவள்ளூர் மாவட்ட காவல்  கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். ஆனால், மாயமான பூங்கொடி உள்பட  3 பேரும் மீட்கப்படவில்லை.

இதையடுத்து, நீதிமன்றத்தில்ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார். அதில் கடத்தப்பட்ட மனைவி பூங்கொடி, மகன் நிஷாந்த், மாமியார் வசந்தி ஆகியோரை மீட்க வேண்டும் என்று குறிப்பிட்டி ருந்தார். இதைத் தொடர்ந்து மகன், தாயுடன் கடத்தப்  பட்ட கவுன்சிலர் பூங்கொடியை மீட்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் உத்தர விட்டார். திருத்தணி டி.எஸ்.பி. சேகர், ஆய்வாளர் முருகன், உதவி ஆய்வாளர் சிவா ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். அப்போது கவுன்சிலர் பூங்கொடி உள்பட 3 பேரும் திருப்பதியில் உள்ள விடுதியில் அடைத்து வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. பின்னர், அந்த விடுதியை சுற்றி வளைத்து சோதனையிட்ட காவல்துறையினர்  பூங்கொடி, அவரது மகன் நிஷாந்த், தாய் வசந்தி ஆகியோரை ஒரு அறையிலிருந்து மீட்டனர்.  கடத்தப்பட்ட கவுன்சிலர் பூங்கொடி, அவரது மகன் நிஷாந்த், தாய் வசந்தி ஆகியோர் மீட்கப்பட்டது குறித்து திருப்பதி காவல்துறைக்கு திருவள்ளூர் மாவட்ட காவல்துறை தகவல் தெரி வித்தனர். பின்னர், பூங்கொடி உள்பட 3 பேரையும்  திருத்தணிக்கு அழைத்து வந்து திருத்தணி மகளிர் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்தனர்.   கடத்தல் பின்னணியில் உள்ளவர்கள் யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடந்து வரு கிறது.

;