tamilnadu

img

பேராசிரியர் அ.கருணானந்தன், வி.ஜி.சந்தோசத்துக்கு பெரியார் விருது

சென்னை,ஜன.18- சென்னை பெரியார் திடலில் நடந்த விழாவில் பேராசிரியர் அ. கருணானந்தன், தொழில் அதிபர்  வி.ஜி.சந்தோசத்துக்கு பெரியார்  விருதை கி. வீரமணி வழங்கி னார்.  பொங்கல் பண்டிகையை யொட்டி தந்தை பெரியார் முத்  தமிழ் மன்றம் சார்பில் திராவிடர் திருநாள் விழா சென்னை வேப்  பேரி பெரியார் திடலில் நடை பெற்றது. முதல் நாள் நிகழ்ச்சி யில் பெரியார் வீர விளையாட்டு கழகத்தைச் சேர்ந்த இளை ஞர்கள், சிறுவர்கள், சிறுமிகள் நெருப்புடன் கூடிய சிலம்பத்தை சுழற்றி சாகசம் செய்தனர். இதைத்தொடர்ந்து சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த பிளாக் பாய்ஸ் குழுவினரின் இசை  மற்றும் நடன நிகழ்ச்சி நடை பெற்றது.

“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் திருவள்ளுவர் 2050”  சிறப்புக் கண்காட்சியை வழக்கு ரைஞர் அ.அருள்மொழி திறந்து வைத்தார். தி.க பொருளாளர் வீ. குமரேசன் வரவேற்றார். துணைப்  பொதுச் செயலாளர் பொறியா ளர் ச.இன்பக்கனி அறிமுகவுரை யாற்றினார். இறைவி தொகுத்து வழங்கினார். பகுத்தறிவாளர் கழகப் பொதுச் செயலாளர் இரா. தமிழ்ச்செல்வன் நன்றி கூறினார். இரண்டாம் நாள், பெரியார் திடலில் உள்ள ராதாமன்றத்தில் சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது. பேராசிரியர் கருணானந்தம், தொழில் அதிபர் வி.ஜி.சந்தோ சம், திரைப்பட நடிகர் சின்னி ஜெயந்த், இசையமைப்பாளர் மு. ஜிப்ரான், மக்களிசைப் பாடகர் டாக்டர் த.வேல்முருகன் ஆகியோ ருக்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி பெரியார் விருது வழங்கி பாராட்டினார். திராவிடர் கழக பொதுச் செய லாளர் வீ.அன்புராஜ், துணைத்  தலைவர் கலி.பூங்குன்றன், அரசு செல்லையா, மணியம்மை  உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர். ஓவியா அன்புமொழி நன்றியுரை கூறினார்.

;