tamilnadu

img

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் முறைகேடு: 200 பேருக்கு தடை

சென்னை, ஜன. 29- பாலிடெக்னிக் விரிவுரையா ளர் தேர்வில் முறைகேட்டில் ஈடு பட்ட 200 தேர்வர்களையும் மீண் டும் தேர்வு எழுத அனுமதிக்கக் கூடாது என்று அரசுக்கு ஆசிரி யர் தேர்வு வாரியம் கடிதம் அனுப்பி உள்ளது. அரசு பாலிடெக்னிக் விரிவுரை யாளர் பணிக்கான தேர்வு 2017ஆம் ஆண்டு நடைபெற்றது. இந்த தேர்வினை ஒரு லட்சத்து 33 ஆயிரம் பேர் தேர்வு எழுதி னார்கள். இதில் 2 ஆயிரம் பேர்  மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு சான்றிதழ்  சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்ட னர். இந்த தேர்வினை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தியது. தேர்வு செய்யப்பட்ட பாலிடெக்னிக் விரிவுரையாளர்களில் 200 பேர் பணம் கொடுத்து தேர்ச்சி பெற்று  இருப்பதாக ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு புகார் வந்தது.

இதையடுத்து விசாரணை நடத்தியதில் 200 தேர்வர்கள் 50 முதல் 100 மதிப்பெண் வரை கூடுத லாக பெற்று இருப்பது தெரிய  வந்தது. இதையடுத்து பாலி டெக்னிக் விரிவுரையாளர் தேர்வு  ரத்து செய்து மறுதேர்வு நடத்தப்  பட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து அந்த தேர்வு நடத்தப்பட்டது. இதற்கிடையில் காவல்துறை யின் விசாரணையில் 200 பேர் பல லட்சம் கொடுத்து மதிப்பெண் அதிகமாக வாங்கியிருப்பதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்  கப்பட்டு வருகிறது. மேலும் இந்த  முறைகேட்டில் ஈடுபட்ட இடைத் தரகர்கள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்பட்டு வரு கிறது.

இந்த நிலையில் மே மாதம்  2 மற்றும் 3 ஆம் தேதி பாலி டெக்னிக் விரிவுரையாளர் மறு தேர்வு நடத்தப்படும் என்று அறி விக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆன்லைன் பதிவு ஜனவரி 22 ஆம்  தேதி முதல் பிப்ரவரி 12 ஆம் தேதி  வரை நடைபெறுகிறது. மீண்டும்  தேர்வுக் எழுதக்கூடிய விண்ணப்ப தாரர்கள் தேர்வு கட்டணம் வசூ லிக்கக் கூடாது என்ற கோரிக் கையை வைத்தனர். ஆனால் அதனை ஆசிரியர் தேர்வு வாரியம்  ஏற்கவில்லை. புதிதாக தேர்வு நடத்தும் போது அதற்கான கட்ட ணத்தை தவிர்க்க இயலாது. அத னால் தேர்வுக் கட்டணம் செலுத்த வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிலையில் முறை கேட்டில் ஈடுபட்ட 200 தேர்வர்க ளையும் மீண்டும் தேர்வு எழுத அனுமதிக்கக் கூடாது என்று ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு கோரிக்கை வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து முறை கேடு செய்தவர்களை மறுதேர் வுக்கு அனுமதிக்கக் கூடாது, தேர்வு எழுத தடை விதிக்க வேண்  டும் என்று அரசுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் கடிதம் அனுப்பி உள்ளது. இதற்கான அனுமதி கிடைத்து  விடும் என்றும் முறைகேடு செய்த  தேர்வர்கள் தேர்வு எழுத தடை  உத்தரவு விரைவில் வரும் என்றும் தேர்வு வாரிய வட்டாரங் கள் தெரிவிக்கின்றன.

;