tamilnadu

img

சாலையோரங்களில் கொட்டப்படும்  மருத்துவக் கழிவுகள் - என்ன செய்கிறது தமிழகஅரசு..?

திருச்சியில் சாலையோரங்களில் கொட்டப்படும்  மருத்துவக் கழிவுகளால் அச்சத்தில் உள்ள கிராம மக்கள்..

திருச்சி மாவட்டம் திருவானைக்காவல் - கல்லணை சாலையில் பனையபுரம் கிராமம் உள்ளது. சென்னை நான்கு வழிச்சாலைக்கு அருகில் உள்ள இந்த கிராம சாலையோரங்களில் இரவு நேரம் ஆள் நடமாட்டம் இல்லாத சமயம் பார்த்து மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  மருத்துவமனையில் பயன்படுத்தப்பட்ட ஊசி உள்ளிட்ட கழிவுகளை இந்தப் பகுதியில் வீசிச் செல்வதாகவும் சில தனியார் மருத்துவமனைகளின் கழிவுகள்தான் இவை என்றும் பொது மக்கள் கூறுகின்றனர்.

கொரோனா தொற்று :

திருச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வரும் நிலையில், தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 4,500க்கும் அதிகமாகியுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் மருத்துவர்கள், செவிலியர்கள், காவலர்கள் என இதுவரை 60 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் கொரோனா பரவி வரும் காலத்தில், அதை கட்டுப்படுத்துவதே கடினமான இருக்கும் நிலையில் ,இப்படி மருத்துவக் கழிவுகள் சாலையோரங்களில் கொட்டப்பட்டால் ,அதன் மூலம் நோய் பரவ வாய்ப்புள்ளது.அதை தடுக்குமாறு அப்பகுதி மக்கள் அரசிடம் கேட்கும் நிலையில் ,ன்ன நடவடிக்கை எடுக்க போகிறது அதிமுக அரசு...?

;