சென்னை, ஏப்.22- கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டு இன்னுயிரைத் துறப்பவர்களுக்கு மரியாதை அளிக்கும் வகையில் பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை யில், கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் பணியில் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகா தாரப் பணியாளர்கள், காவல் மற்றும் வருவாய்த் துறையினர், தூய்மைப் பணியாளர்கள், உள்ளாட்சி அமைப்பைச் சேர்ந்தவர்கள் தன்னலம் கருதா மல் பணியாற்றி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா தொற்றால் இன்னுயிரை ஈந்த வர்களின் உடல்களை அடக்கம் அல்லது தகனம் செய்வது தொடர்பாக நடைபெற்ற சம்பவங்கள் மிகுந்த வருத்தமும் வேதனையும் அளிப்பதாகக் குறிப்பிட்டுள் ளார். அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனு தாபத்தையும் தெரிவித்துக் கொண்டுள்ளார். இது போன்ற சம்பவங்கள் இனியும் நடைபெறாமல் இருக்க, தக்க பாதுகாப்பு நடவடிக்கை களைத் தமி ழக அரசு எடுக்கும் எனவும், மருத்துவர்களும் களப் பணியாளர்களும் அச்சப்படத் தேவையில்லை எனவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.