tamilnadu

img

பொதுத் தேர்வு அட்டவணை

சென்னை, ஜூலை 19- பத்தாம் வகுப்பு, பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 ஆகிய வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகளுக்கான அட்ட வணையை அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் பிளஸ்-2 வகுப்பு தேர்வுகள் 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் 2ஆம் தேதி துவங்கி 24ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இத்தேர்வின் முடிவுகள் ஏப்ரல் 24ஆம் தேதி வெளியாகிறது. பிளஸ்-1 வகுப்பு தேர்வுகள் அடுத்தாண்டு மார்ச்  4ஆம் தேதி தொடங்கி 26ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இத்தேர்வின் முடிவுகள் மே மாதம் 14ஆம் தேதி வெளியாகிறது. பத்தாம் வகுப்பு பொது தேர்வுகள் அடுத்தாண்டு மார்ச் மாதம் 17ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 9ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் இந்த தேர்வின் முடிவுகள் மே மாதம் 4ஆம் தேதி வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.