திருவண்ணாமலை, மே 4- 144 தடை உத்தரவை மீறி, ஏரியில் மீன் பிடித்த 20 பேர், காவல் துறையின ரைக் கண்டதும் மீன்களை ஏரியிலேயே விட்டுவிட்டு தலை தெறிக்க தப்பி ஓடினர்.
திருவண்ணாமலை மாவட்டம், வந்த வாசியை அடுத்த எஸ். மோட்டூர் கிரா மத்தில் 144 தடை உத்தரவை மீறி, 20க்கும் மேற்பட்டோர் ஏரியில் கும்பலாக சேர்ந்து மீன் பிடித்து வந்தனர். பிடித்த மீன்களை அங்கேயே விற்பனையும் செய்தனர். மீன் களை வாங்குவதற்கு நூற்றுக்கும் மேற் பட்டோர் அப்பகுதிக்குச் சென்றுள்ளனர். இது குறித்து காவல் துறையினருக்கு கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படை யில் வந்தவாசி காவல் ஆய்வாளர் முரளி தரன் தலைமையில் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீன் பிடித்துக் கொண்டிருந்தவர்களை எச்ச ரித்தனர்.
காவல் துறையினரைக் கண்டதும் ஏரியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த வர்கள் 200 கிலொ மீன், வலை மற்றும் எடை தராசு போன்றவற்றை ஏரிக்கரையில் போட்டுவிட்டு தப்பினால் போதும் என்று தலை தெறிக்க ஓட்டம் பிடித்தனர். கைப்பற்றிய 200 கிலொ மீன்களை ஏரி தண்ணீரிலேயே காவல் துறையினர் விட்டனர். மீன் வலை மற்றும் எடை தராசு ஆகியவற்றை காவல் துறையினர் பறி முதல் செய்து விசாரணை மேற்கொண்ட னர்.