பிரிட்டனில் உள்ள பிரிஸ்டன் பல்கலைக் கழகமும், அமெரிக்காவின் டென்னஸீ பல்கலைக் கழகமும் இணைந்து அண்மையில் ஒரு ஆய்வை மேற்கொண்டு, அதன் முடிவுகளை அறிக்கையாக வெளி யிட்டுள்ளனர். அதில் கடந்த 100 ஆண்டுகள் காலத்தை (1900 முதல் 2000 வரை) உலகின் 109 நாடுகளின் பொருளாதார நிலைமைகளை ஆய்விற்கு எடுத்துக் கொண்டதில், எந்தெந்த நாடுகளிலெல்லாம் மதச்சார் பின்மை கோட்பாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டதோ, அத்தகைய நாடுகளின் பொருளாதாரம் சீரான ஸ்திரத் தன்மையோடு வளர்ச்சி அடைவதை காண முடிவதாக விபரங்களை வெளியிட்டுள்ளனர்.
இந்தியாவைச் சார்ந்த பொருளாதார அறிஞர் கெளசிக் பாசு வெளியிட்ட ஒரு அறிக்கையில், இதே அம்சங்களை வேறு ஒரு கோணத்தில் வெளிப்படுத்துகிறார்: “அரேபியா வின் பொருளாதார மையங்களாக இருந்த பாக்தாத் மற்றும் டமாஸ்கஸ் ஆகிய நகரங்களின் வீழ்ச்சியென்பது, அந்த அரசுகள் மதச்சார்பின்மை கோட்பாட்டில் இருந்து விலக்கப்பட்டு மத அடிப்படையிலானதாக மாற்றப்பட்ட வேளையில் தான் நடந்தது” என்கிறார். மேலும் “15 மற்றும் 16ஆம் நூற்றாண்டுகளில் உலகின் வலுவான பொருளா தார மையமாக திகழ்ந்த போர்ச்சுகல், கிறித்தவ அடிப்படை வாதத்தை நோக்கி திரும்பும்போது பொருளாதார ரீதியாக வீழ்ச்சியடைந்ததையும் காண முடிந்தது” என்கிறார். இன்றைக்கும் உலகில் அப்படியான நிலைமை களைத்தான் காண முடிகிறது. அரசியலில் ஏற்பட்டு வரும் வலதுசாரி திருப்பம் என்பது சமூக பதற்றத்தோடு, பொருளாதார நெருக்கடிகளையும் கூடவே உருவாக்கு கிறது.
இன்றைக்கும் உலகில் அப்படியான நிலைமை களைத்தான் காண முடிகிறது. அரசியலில் ஏற்பட்டு வரும் வலதுசாரி திருப்பம் என்பது சமூக பதற்றத்தோடு, பொருளாதார நெருக்கடிகளையும் கூடவே உருவாக்கு கிறது. இந்தியாவில் பாஜக அரசால் கொண்டுவரப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டம் நமது மதச்சார்பின்மையை கேள்விக்குள்ளாக்குவதோடு, தேசத்தின் பொருளாதார கட்டுமானத்தின் மீதும் பெரும் அதிர்வலைகளை ஏற் படுத்தியுள்ளது என்பதே உண்மை. இந்தியா விரைவில் பொருளாதார வல்லரசாகும் என மோடி ஊதும் மகுடிச் சத்தம், இவர்கள் கொண்டு வந்துள்ள இந்த சட்டத் திருத்தத்தால் மெல்ல மெல்ல பலவீனமடைகிறது. அண்மை யில் மிரர் ஆங்கில ஏடு “மத அடிப்படைவாதக் கண் ணோட்டத்தோடு இத்தகைய ஒரு முயற்சியை மேற்கொண்டுள்ளதால் இந்தியா தனக்கு வர வேண்டிய 439 பில்லியன் டாலர் முதலீட்டை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது” என குறிப்பிட்டுள்ளது. அதேபோல ஐரோப்பிய ஒன்றியத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்தியாவின் இந்த சட்டத்திருத்தத்தை கண்டித்து ஒரு தீர்மானம் நிறைவேற்றப் போவதாக செய்திகளும் வெளிவருகின்றன. அத்தகைய தொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் அது நிச்சயம் இந்திய பொருளாதாரத்தையும், இந்தியாவுடனான உலக நாடுகளின் வர்த்தகத்தையும் பாதிக்கவே செய்யும்.
பிரதமரின் பொருளாதார ஆலோசகராக பணி யாற்றிய அரவிந்த் சுப்ரமணியம், ஹார்வர்டு பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும் ஓர் ஆய்விதழில் வெளியிட்டுள்ள கட்டுரையில், “இந்தியாவின் பொருளா தாரம் 1991 ஆம் ஆண்டிற்கு முன்பாக இருந்த நிலைக்கு சென்று விட்டது. நெருக்கடியில் இருந்து மீள்வதற்கான வாய்ப்புகள் எதுவும் தற்போது தென்படவில்லை என்று சொன்னதோடு, மோடி அரசின் நடவடிக்கைகள் எதுவும் நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு உதவி செய்வதாக இல்லை” எனவும் தெரிவித்திருக்கிறார்.
நிலைமைகள் இப்படியிருக்க நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறித்து எந்தவொரு அக்கறையுமின்றி தங்கள் குறுகிய அரசியல் கண்ணோட்டத்தின் மீதான நாட்டமே பாஜகவிற்கு முக்கியமாகப்படுகிறது. இந்தியா 2025-ஆம் ஆண்டிற்குள் 5 டிரில்லியன் பொருளாதாரத்தை - (330 லட்சம் கோடி) எட்டிவிடும்; அதுவே எங்கள் இலக்கு எனக் கூறும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் அறிவிப்பில் “தேசிய அடிப்படை கட்டுமான பணிக ளுக்காக (National Infrastructure Pipeline) 102 லட்சம் கோடி ரூபாய் 2025க்குள் முதலீடு செய்யப்படும் என அறி வித்திருக்கிறார். ஆனால் இத்தகைய அறிவிப்புகளை யெல்லாம் நடைமுறைப்படுத்த வேண்டுமெனில் தேசத்தில் ஒரு சுமூகமான அரசியல் சூழல் நிலவ வேண்டும். இவர்க ளின் பொருளாதார கனவுகளுக்கெதிராக இவர்களின் மதவெறி அரசியலே குறுக்கிடுகிறது என்பது தான் மிக முக்கியமான “நகை முரண்” ஆகும்.
இவர்கள் ஆட்சிக்கு வரும் போது இந்தியாவை குஜராத் ஆக மாற்றுவோம் என்றார்கள். ஆனால் நடை முறையில் இந்தியாவை அசாம் மாநிலத்தைப் போல மாற்றிட விரும்புகிறார்கள் போலும். அசாமில் உள்ள மக்கள் தொகையான 3 கோடியே 30 லட்சம் பேரில் குடியுரிமை சட்டத்தினால் தற்போது, 19 இலட்சம் பேர் நாடற்ற வர்களாக மாற்றப்பட்டு வதைமுகாம்களில் அடைக்கப் பட்டுள்ளனர். இது அம்மாநில மக்கள் தொகையில் 6% ஆகும். அசாமில் அமல்படுத்தப்பட்ட தேசிய குடி யுரிமை சட்டத்தை நாடு முழுவதும் அமலாக்கும் போது, ஒரு வேளை அதே 6% அளவிலான மக்கள் நாடற்றவர்க ளாக அறிவிக்கப்படுவார்களேயானால் அது சுமார் 8 கோடிப் பேர் என்ற அளவில் இருக்கும். தற்போது அசாமில் முகாம்களை பராமரிக்க செலவிடப்படும் தொகையை நாடு முழுவதற்கும் கணக்கிட்டால் சுமார் ரூ.3.6 லட்சம் கோடி தொகை ஒரு ஆண்டிற்கு தேவைப்படும். இவர்களின் கணக்குப்படி தேசிய அடிப்படை கட்டுமானத்திற்கு ஆகும் செலவை விட முகாம்களின் பராமரிப்பிற்கான செலவுகள் மூன்று மடங்கு அதிகமாகும்.
நமது தேசம் தற்போது மிக முக்கியமானதொரு கட்டத்தில் இருக்கிறது. எந்த திசையில் எங்களை அழைத்துச் செல்லப் போகிறீர்கள்? மதச்சார்பின்மை எனும் அமைதி வழியிலா? அல்லது மதவெறி நடவடிக்கைகளால் உரு வாக்கப்படும் பேரழிவுகளை நோக்கியா என நாம் ஒவ்வொரு வரும் இந்த அரசை நோக்கி கேட்க வேண்டும். தனித்தனியான நமது குரல் ஒன்றாக காற்றில் கலந்து அது ஒரு பேரோசையாக மாற வேண்டும். அத்தகை தொரு உரத்த முழக்கமே நமது ஜனநாயக மாண்புகளை யும், தேசத்தையும் பாதுகாத்திடும்.
கட்டுரையாளர் : சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர்