புதுதில்லி:
சீனாவுடனான எல்லை மோதலைத் தொடர்ந்து, இந்தியப் படைகள் பெருமளவில் எல்லையில் குவிக்கப்பட்டு வருகின்றன. ராணுவத் தளவாடங்களும் எல்லைக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின் றன.
இறையாண்மையை பாதுகாப்போம் என தேசம் உறுதிபூண்டுஇருப்பதாகவும், கிழக்கு லடாக்கில் தனது போர் தளவாடங்களை இந்தியா வேகமாக நகர்த்தியது எதிரிகளுக்கு (சீனா) ஒரு வலுவான செய்தியை அளித்திருப்பதாகவும் மத்திய பாதுகாப்புத்துறை ராஜ்நாத் சிங்கும் அண்மையில் பேசியிருந்தார்.இந்நிலையில், நீண்டநாட் களுக்கான இந்த படைக்குவிப்பு, பல்வேறு சிரமங்களை ஏற்படுத் தும், பொருளாதார ரீதியாகவும் இந்தியாவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று 2011 முதல் 2013 வரை 14-ஆவது படைப்பிரிவின் தளவாடப் பிரிவுக்கு தலைமை தாங்கிய ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஏ.பி. சிங்பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.“தற்போதைய நிலவரங்கள், இந்தியாவுக்கு மிகப்பெரிய பொருளாதார அழுத்தத்தை ஏற்படுத் தும். சீனாவுக்கு நிகரான படைக்குவிப்பு என்ற வேட்கை ஒரு அபாயமான போக்கில் கொண்டு செல் லும். தேசத்தின் பொருளாதாரம் பலவீனமடையும்.
கிழக்கு லடாக்கின் உயரமான நிலப்பரப்பில், ஒவ்வொரு வீரரும்அண்டை நாட்டு எதிரி, வானிலை, சொந்த ஆரோக்கியம் என மூன்றுகூறுகளில் போராடிக் கொண்டிருக் கிறார்கள்.டெப்சாங் சமவெளி, கால்வான்பள்ளத்தாக்கு, கோக்ரா போஸ்ட்அனைத்தும் 15 ஆயிரம் அடி உயரத்திற்கு மேல் உள்ளதால், படையினருக்கு சிறப்புப் பாதுகாப்புக் கருவிகள் தேவைப்படும். ராணுவஉபகரணங்களின் தேவை இரட்டிப்பாகும். சோஜி லா, ரோஹ்தாங் பாஸ் வழியாக செல்லும் பாதைகள் நவம்பருக்குள் மூடப்படுவதால், நமது தயாரிப்புக்கு போதுமான நேரமும் இல்லை” என்று மேஜர் ஏ.பி. சிங் குறிப்பிட்டுள்ளார்.கூடுதல் துருப்புக்களுக்கு தங்குமிடங்களை உருவாக்குவது, வெப்பநிலை மைனஸ் 20 டிகிரி செல்சியஸ் வரை, குறைந்து வருவதால் நிலைமைகளுக்கு ஏற்ற முகாம்களை அமைப்பது ஆகியவையே தற்போதைய முக்கிய விஷயம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.