பொதுத்துறை மற்றும் கனிம வளங்கள் தனியார்மயம், தொழிற்சங்க சட்டங்கள் திருத்தம், தொழிலாளர் உரிமைகள் பறிப்பு உள்ளிட்டவைகளுக்கு எதிராக இயக்கம் நடத்த மத்திய தொழிற்சங்கங்கள் அறைகூவல் விடுத்திருந்தன. இதனையொட்டி சனிக்கிழமையன்று (ஆக.8) தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. அதன் ஒருபகுதியாக வடமாவட்டங்களிலும் போராட்டங்கள் நடைபெற்றன.