பழனி, ஏப். 13 பழனியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தோழர் சுப்பிரமணி திங்களன்று காலை காலமானார். அவருக்கு வயது 88.
அவரது மறைவுச்செய்தி அறிந்து கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர்கள் கே.பாலபாரதி , என் பாண்டி, மாவட்ட செயலாளர் ஆர்.சச்சிதானந்தம் ,மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வ.ராஜமாணிக்கம் ,அருள்செல்வன், கமலக்கண்ணன், நகர செயலாளர் கந்தசாமி, தொப்பம்பட்டி ஒன்றிய செயலாளர் ராமசாமி மற்றும் மாவட்டக்குழு உறுப்பினர்கள் குருசாமி ,களஞ்சியம், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் அவரது உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தட்டாங்குளம் மயானத்தில் தோழர் சுப்பிரமணி உடல் அடக்கம் செய்யப்பட்டது.
கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினராகவும் விவசாயிகள் சங்க பொறுப்பாளராகவும் நீண்ட காலம் செயலாற்றியவர் தோழர் சுப்பிரமணி என்பது குறிப்பிடத்தக்கது.