tamilnadu

img

பழங்குடி மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் சிஐடியு, எல்ஐசி, ஆசிரியர்கள் வழங்கினர்

தேனி, ஏப்.27- பெரியகுளம் அருகே கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக பாதிக்கப்பட்ட பழங்குடி மக்களுக்கு அத்தியாவசிய பொருட் களை சிஐடியு, எல்ஐசி, ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆகிய அமைப்புகள் சார்பில் வழங்கப்பட்டன. பெரியகுளம் கீழ வடகரை ஊராட்சி செல்லா காலனியில் மலை வாழ் பழங்குடியினர் 44 குடும்பத்தி னர் வசிக்கிறார்கள். கொரோனா தொற்று காரணமாக வேலையில்லா மல் பெரும் சிரமத்திற்குள்ளான இந்த மக்களுக்கு எல்ஐசி பெரிய குளம் கிளை சார்பில் 200 கிலோ அரிசி, 20 லிட்டர் எண்ணெய் மற்றும் காய்கறிகள், தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி பெரிய குளம் வட்டாரக்கிளை சார்பில் 30 கிலோ பருப்பு மற்றும் காய்கறிகள் ஆகியவை வழங்கப்பட்டன .

இந்நிகழ்ச்சியில் சிஐடியு மாவட்டச் செயலாளர் எம். இராமச் சந்திரன், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் சு.வெண்மணி, ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டார நிர்வா கிகள் செல்லத் துரை, இராஜ்குமார் ஆகியோர் பங்கேற்று, வழங்கினர்.

கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட நெல்லை மாவட்டம் சமூகரெங்கபுரத்தில் இலங்கைத் தமிழர் குடும்பங்களுக்கும் தென்காசி மாவட்டத்துக்கு உட்பட்ட 8 தாலுகா பகுதிகளில் உள்ள 40 இடங்களில் மாவட்ட நிர்வாகத்தால் கண்டறியப்பட்ட ஏழைப் பிரிவினர், தூய்மைப் பணியாளர் / மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு மதிமுக தென்காசி மாவட்டச் செயலாளர் தி.மு.இராசேந்திரன், உணவுப்பொருட்கள் மற்றும் முகக் கவசங்கள் ஆகியவற்றை வழங்கினார்.

;