சென்னை,பிப்.22- மக்கள் தொகை பதி வேட்டுக்கான கணக்கெடுப் பின்போது, தாய், தந்தை, பிறந்த இடம், ஆதார், செல்லி டப்பேசி போன்ற விவரங்க ளைக் கேட்கக் கூடாது என மத்திய அரசுக்கு கடிதம் எழுதி இருப்பதாக அதிமுக சார்பில் முதல்வா் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளனர். மேலும் சமூக நல்லி ணக்கம் காக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர்கள் வேண்டு கோள் விடுத்துள்ளனர். இது குறித்து, கட்சியின் ஒருங்கி ணைப்பாளரும் துணை முதல் வருமான ஓ.பன்னீர்செல் வம், இணை ஒருங்கி ணைப்பாளரும் முதல்வரு மான எடப்பாடி கே.பழனி சாமி ஆகியோர் வெள்ளிக் கிழமை வெளியிட்ட அறிக் கையில் தாய்மொழி, தந்தை, தாய், துணைவர் பிறந்த இடம், பிறந்த தேதி விவரம், ஆதார், செல்லிடப்பேசி எண், வாக்காளர் அட்டை, ஓட்டுநர் உரிம எண் ஆகிய விவரங்கள் எதிர்வரும் கணக்கெடுப்பில் தவிர்க்கப் பட வேண்டும் என்பதை வலி யுறுத்தி மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதி யுள்ளது. தமிழகத்தில் எந்த வொரு சிறுபான்மையினருக் கும் எந்தவித அநீதியும் இழைக்கப்பட மாட்டாது என்றும் அவர் கூறியுள்ளார்.