tamilnadu

img

ப.சிதம்பரம் வீட்டில் வெடிகுண்டு வீச்சு: 6 பேருக்கு 5 ஆண்டு சிறை

சென்னை,ஜன.31- முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்ப ரம் வீட்டில் வெடிகுண்டு வீசிய வழக்கில் கைது செய்யப்பட்ட 6 பேருக்கு தலா  5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து  பூந்தமல்லி நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தின் பண்ணை வீடு சிவகங்கை மாவட்டம் நாச்சியார்புரம் பகுதியில் உள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு ப. சிதம்பரத்தின் பண்ணை வீட்டின் அருகே  பைப் வெடிகுண்டுகள் கண்டெடுக்கப் பட்டன.  இது தொடர்பாக சிஐடி காவல்துறை யினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை  நடத்தினார்கள். இந்த வழக்கில் தொடர்பு டைய முரசு, காளை லிங்கம், தமிழ் அரசன்,  ராஜா, ஜான், ஆதி ஆகிய 6 பேரை கைது  செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு பூந்தமல்லியில் உள்ள வெடிகுண்டு வழக்குகள் விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.  வழக்கை விசாரணை செய்த நீதிபதி செந்தூர்பாண்டி இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கினார். இதில் குற்றம்சாட்டப்பட்ட 6 பேருக்கும்  தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு  வழங்கினார். இந்த வழக்கில் அரசு தரப்பில்  வழக்கறிஞர் விஜயராஜ் ஆஜராகி வாதாடினார்.

;