tamilnadu

img

கடல்போல் காட்சியளிக்கும் பவானிசாகர் அணை

ஈரோடு,நவ.4- ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகில் 105 அடி உயரமும் 32 புள்ளி 8 டிஎம்சி கொள்ளளவும் கொண்ட பவானிசாகர் அணை மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்க ளில் 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. தமிழகத்தில் தஞ்சை டெல்டா பாசனத்திற்கு அடுத்தபடியாக பெரிய பாசனப்பரப்பை கொண்டதாக விளங்குகிறது. நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மற்றும் வடகேரளாவில் பெய்த தொடர் மழையால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து 104 புள்ளி 28 அடியாக உள்ளது. அணை முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளதால் நீர்த்தேக்கப்பகுதி கடல் போல் காட்சியளிக்கிறது.

அணையின் மொத்த நீர்தேக்கப்பரப்பான 30 சதுர மைல் முழுமைக்கும் தண்ணீர் பரந்து விரிந்துள்ளது. மேலும் நீல நிறத்தில் தண்ணீர் தேங்கி கடல்போல் காட்சியளிக்கிறது. மேலும் 9 மேல் மதகுகளில் இருந்து வெளி யேறும் தண்ணீர், பால் போல் வெண்ணிறத்தில் வழிந்து பவானி ஆற்றில் கலக்கும் காட்சி ரம்மியமாக உள்ளது. 

;