சென்னை, ஏப்.20- கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்திற்கு 100 கோடி ரூபாய் வழங்க ஐசிஐசிஐ வங்கி உறுதியளித்துள்ளது.
மத்திய அரசுக்கு ரூ. 80 கோடியும் தொற்று நோயை எதிர்த்துப் போராடு வதற்கான முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு வரும் மாநில அரசுகளுக்கும் மருத்துவமனைகள்,மத்திய ரிசர்வுகாவல்படை மற்றும் காவல்துறை ஆகியவற் றுக்கு பாதுகாப்பு உபகர ணங்களுக்காக 20 கோடியும் வழங்க உள்ளது. ஐசிஐசிஐ குழுமம். ஐசிஐசிஐ வங்கி மற் றும் அதன் அனைத்து துணை நிறுவனங்களும் இணைந்து இந்த ரூ. 100 கோடியை வழங்குவதாக வங்கியின் தலைவர் திரு. சந்தீப் பத்ரா தெரிவித்துள்ளார்.