tamilnadu

img

மருத்துவக் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் நியமனம்: ஒப்புதல் வழங்க உத்தரவு

சென்னை, ஆக. 10- மருத்துவக் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் நியமனத்துக் கான வயது வரம்பை 40லிருந்து 45  ஆக உயர்த்தும் வரைவு அறி விப்பாணைக்கு மூன்று வாரங்க ளில் ஒப்புதல் வழங்க மத்திய அர சுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மருத்துவக் கல்லூரி ஆசிரி யர்களுக்கான குறைந்தபட்ச தகுதி  ஒழுங்குமுறை விதிகளில் 2017ம் ஆண்டு திருத்தம் கொண்டு வரப்  பட்டது. இதன்படி, மருத்துவ கல்லூரிகளில் உதவி பேராசிரி யர்கள் நியமனத்துக்கான வயது  வரம்பு 40 வயது என நிர்ணயிக்கப் பட்டுள்ளது. இந்த விதியை எதிர்த்து சுரேஷ்குமார் உள்ளிட்ட ஆறு மருத்  துவர்கள் சென்னை உயர்நீதிமன்  றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிர சாத் அடங்கிய அமர்வில் விசார ணைக்கு வந்தபோது, மருத்துவக் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் நியமனத்துக்கான வயது வரம்பை 40 வயதில் இருந்து 45 ஆக உயர்த்த கோரி மத்திய சுகாதார துறைக்கு வரைவு அறிவிப்பாணை அனுப்பியுள்ளதாகவும், அதற்கு மத்திய அரசு இன்னும் ஒப்புதல் வழங்கவில்லை எனவும் இந்திய மருத்துவக் கவுன்சில் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த வரைவு அறிவிப்பை ஏற்று, வயது வரம்பை 45 ஆக  உயர்த்த மத்திய அரசு முடிவு செய்  துள்ளதாக, மத்திய சுகாதார துறை தரப்பில் கூறப்பட்டது. இதை யடுத்து, மருத்துவ கவுன்சிலின் வரைவு அறிவிப்பாணைக்கு மூன்று  வாரங்களில் ஒப்புதல் வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதி கள், அதை அமல்படுத்த தமிழக அரசுக்கும் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

;