tamilnadu

img

விஐடியில் பி.டெக் சேர விண்ணப்பம் விற்பனை

வேலூர், நவ.8- விஐடி பல்கலைக்கழ கத்தின் வேலூர், சென்னை, ஆந்திர பிரதேசம் மற்றும் போபால் வளாகங்களில் 2020ஆம் ஆண்டிற்கான பி.டெக் பொறியியல் பட்டப்  படிப்பில் சேருவதற்கான நுழைவுத் தேர்வு விண்ணப் பங்கள் வெள்ளியன்று (நவ.8)  விற்பனை தொடங்கியது. வேலூர் தலைமை தபால் நிலையத்தில் விண்ணப்ப படிவ விற்பனையை விஐடி வேந்தர் கோ .விசுவநாதன் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் விஐடி துணைத் தலைவர் முனைவர் சேகர் விசுவநாதன், செயல் இயக்  குநர் முனைவர் சந்தியா பெண்ட்ட ரெட்டி, இணை துணை வேந்தர் முனைவர் சோ.நாராயணன், மாண வர் சேர்க்கை இயக்குநர் முனைவர் கு. கலைச்செல் வன், வேலூர் கோட்ட அஞ்  சலகங்களின் கண்காணிப்பா ளர் போ.கோமல் குமார், தலைமை அஞ்சல் நிலைய அதிகாரி ஜி.சீனிவாசன், உதவி அஞ்சல் கோட்ட கண்  காணிப்பாளர் என்.ராஜ கோபாலன், மக்கள் தொடர்பு  அலுவலர் எஸ்.செல்வகுமார்  மற்றும் டி.சிவலிங்கம் ஆகி யோர் பங்கேற்றனர்.

அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் 13 ஆம் தேதி முதல்  19 ஆம் தேதி வரை ஆன்  லைன் முறையில் நாட்டில்  உள்ள 124 முக்கிய நகரங்களி லும் துபாய், குவைத், மஸ்கட்  மற்றும் கத்தார் உள்ளிட்ட வெளிநாடுகளிலும் அமைக்  கப்பட்டுள்ள 175 மையங்க ளில் இந்த நுழைவுத் தேர்வு  நடைபெறுகிறது. நுழைவுத் தேர்வு விண்ணப்பப் படிவங்கள் வேலூர் உட்பட  நாட்டில் உள்ள 22 முக்கிய நகரங்க ளில் உள்ள தலைமை தபால் நிலையங்கள் மூலம்  விற்பனை செய்யப்படுகிறது. விண்ணப்பக் கட்டணம் ரூ.1250 செலுத்தியும், விஐடி  (Vellore Institute of Technology) என்ற பெயரில்  ரூ.1250-க்கு வங்கி வரைவு காசோலை செலுத்தியும் நேரில் பெற்றுக் கொள்ள லாம். ஆன் லைன் மூலம்  விண்ணப்பிக்க விரும்புப வர்கள் www.vit.ac.in என்ற  இணையதளத்தின் மூலம் ரூ.1150 செலுத்தியும் விண்ணப்பிக்கலாம். இந்த  நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க அடுத் தாண்டு பிப்ரவரி மாதம் 29 ஆம் தேதி கடைசி நாளா கும். மேலும் இது சம்மந்த மாக விவரங்கள் அறிய www. vit.ac.in என்ற இணைய தளத்தில் அறியலாம்.