tamilnadu

img

ஏழை நாட்டுக்கு இருபதாயிரம் கோடியில் புதிய நாடாளுமன்றம், மாளிகைகள்!

மன்னர் ஆட்சிக் காலத்தில் அவர்கள் தங்கள் அரண்மனைக்குச் சென்றுவர புல்வெளி, பூங்காக்கள் சூழ, பார்ப்பதற்கு ரம்மியமான பாதை களை அமைத்துக்கொண்டு சுகபோகமாக வாழ்ந்தார்கள்.    அப்படியான ராஜ பாட்டை என்றழைக்கப்படுகிற “ராஜ்பத்”  மத்திய தில்லியில் இருக்கிறது.  மக்களாட்சி காலத்திலும் இந்த ராஜபாட்டை பராமரிக்கப்படுகிறது.  இதன் ஒரு புறத்தில் குடியரசுத் தலைவர் மாளிகை இருக்கிறது.  இன்னொரு புறத்தில்  இந்தியா கேட் இருக்கிறது.  

இப்பகுதியை விரிவுபடுத்தி, மேம்படுத்த ரூ. 20000 கோடியில் “சென்ட்ரல் விஸ்டா ரீடெவலப்மெண்ட் ப்ராஜக்ட்” என்ற திட்டம் தீட்டப்பட்டுள்ளது.  முன்னரே துவங்க வேண்டிய இத்திட்டச் செயல்பாடு கொரோனாவினால் தள்ளிப் போயுள்ளது.  லாக்டவுன் நீக்கப்பட்டவுடன் ரூ. 20000 கோடி செலவழிப்பது துவங்கப்படும் !

எட்வின் லட்டியன்ஸ் என்பவர் பிரிட்டிஷ் கட்டிடக் கலை நிபுணர்.  அவருடைய பெயரால் லட்டியன்ஸ் டெல்லி என்றும் இப்பகுதி அழைக்கப்படுகிறது. இங்குள்ள பல கட்டிடங்களின் வடிவமைப்பை உருவாக்கியவர் அவர்தான். நாடாளுமன்றம், குடியரசுத்தலைவர் மாளிகை, குடியரசு துணைத் தலைவர் மாளிகை, நார்த் பிளாக், சவுத் பிளாக், நேஷனல் மியூசியம், நேஷனல் ஆர்கைவ்ஸ், உத்யோக் பவன், இந்திராகாந்தி ஆர்ட்ஸ் சென்டர், பிகானீர் ஹவுஸ், ஹைதராபாத் ஹவுஸ், நிர்மாண் பவன், ஜவஹர் பவன் போன்றவை இப்பகுதியில் அமைந்துள்ளன.

சென்ட்ரல் விஸ்டா ரீடெவலப்மெண்ட் ப்ராஜக்ட் என்பது என்ன?

இது பாஜக மற்றும் நரேந்திர மோடியின் விருப்பத் திட்டம்.  லட்டியன்ஸ் டெல்லி பகுதியை மேலும் விரிவுபடுத்தி ஜூலை 2022 க்குள் ஒரு புதிய நாடாளுமன்றக் கட்டிடம் கட்டப்படும். முக்கோண வடிவிலான இப்புதிய நாடாளு மன்றம் 1200 உறுப்பினர்கள் வரை தாராளமாக  உட்கார்கிற அளவுக்கு விசாலமாக இருக்கும். இரண்டு சபைகளின் கூட்டுக் கூட்டத்தினை நடத்திடவும் பயன்படும். இந்தியா வின் 75 ஆவது சுதந்திர தினத்துக்குள் இதனைக் கட்டி முடிக்கத் திட்டம்.  

மார்ச் 2024 க்குள் 32000 ஊழியர்கள் அமர்ந்து பணி யாற்றக்கூடிய எட்டு தளங்களைக் கொண்ட இரண்டு வளாகமுடைய ஒன்றிய அரசின் புதிய தலைமைச் செயலகம் கட்டப்படும்.  பிரதம அமைச்சருக்கு மாளிகை மற்றும் அவரது அலுவலகம் கட்டப்படும்.  பிரதம அமைச்ச ரின் மாளிகை தற்போதைய சவுத் பிளாக்கின் பின்புறம்  ரெய்சினா குன்றின் மீது  அழகுற அமையவுள்ளது.   குடிய ரசுத் துணைத் தலைவருக்கும்  ஒரு புதிய மாளிகை கட்டப்படும். ரம்மியமான பூங்காக்கள் கொண்ட புத்த மைக்கப்பட்ட எழில்மிகு ராஜ பாட்டை   போன்றவைக ளையும் உருவாக்குவது இத்திட்டத்தின் நோக்கமாகும்.  

சவுத் மற்றும் நார்த் பிளாக் என்றழைக்கப்படுகிற பழைய தலைமைச் செயலகங்களை “இந்தியா 75” என்ற தலைப்பிலான அருங்காட்சியகங்களாக மாற்றப்போகி றார்களாம்.  1960 இல் கட்டப்பட்ட நேஷ¬னல் மியூசியம் இடிக்கப்படும். அங்குள்ள பொருட்கள் புதிய அருங்காட்சி யத்தில் வைக்கப்படும்.

ஏழே வாரங்களில்...

2019 இல் ஒன்றிய அரசின் பொதுப்பணித்துறை இத்திட்டத்திற்கான டெண்டர் கோரியது.  2019 அக்டோபரில் டெண்டர் பெற்றது  அகமதாபாத்தின் ஹெச் .சி. பி. டிசைன் பிளானிங் அன்ட் மேனேஜ்மென்ட் (HCP Design Planning & Management) என்ற நிறுவனம்.   இந்நிறு வனம் ஏற்கனவே “சபர்மதி ரிவர் ஃப்ரான்ட் டெவ லப்மென்ட் ப்ராஜக்ட்”, “காந்தி நகர் சென்ட்ரல் விஸ்டா ரீடெவ லப்மென்ட் ப்ராஜக்ட்”, “மும்பை ஃ போர்ட் காம்ப்ளக்ஸ்”, “காசி விஸ்வநாத் ரீடெவலப்மென்ட் ப்ராஜக்ட்” போன்ற வற்றை செய்து கொடுத்திருக்கிறது.  நிறுவனத்தின் உரி மையாளர் பிமல் பட்டேல் என்கிற குஜராத்தி.  இத்திட்டத்தின் முதன்மை வரைவை தயாரித்து அளிப்பதற்காக ரூ.229 கோடியை பிமல் பட்டேல் நிறுவனம் பெற்றுள்ளது.

ஆனால் இத்திட்டத்திற்கு நகர்ப்புற திட்டவிய லாளர்கள், கட்டிடக் கலை நிபுணர்கள்,   பாரம்பரியக் கட்டிட பாதுகாவலர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எனப் பலரி டமிருந்தும் எதிர்ப்புக் கிளம்பியிருக்கிறது.  

இந்தியாவின் முக்கிய எதிர்க்கட்சிகளும் இத்திட்டத்தி ற்கு தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளன.  அதற்குப் பல்வேறு காரணங்கள் உள்ளன.  டெண்டர் கோரிய விதத்தில் வெளிப்படைத் தன்மை இல்லை.  ஆறு நிறுவ னங்கள் கலந்து கொண்டதாகச் சொல்லப்பட்டது. கடைசி யில் அகமதாபாத்தின் பிமல் பட்டேல் நிறுவனத்திற்கு கட்டு மான ஒப்பந்தம் தரப்பட்டுள்ளது.  ஏழே வாரங்களில் இந்நட வடிக்கைகள் அனைத்தும் முடிவுற்றுள்ளது.  திட்டத்தை செய்து முடிப்பதில் ஒன்றிய அரசு அவசரம் காட்டுகிறது.  இந்த ஆண்டு இறுதிக்குள் நிலச்சீரமைப்பை முடித்துவிட திட்டமிடப்பட்டுள்ளது.

பொதுமக்களின் 80 ஏக்கர் நிலப்பறிப்பு

இத்திட்டத்தின் கீழ் வரும் நிலப் பயன்பாட்டில் மாற்றம் கொண்டுவரப்பட இருக்கிறது.  இப்பகுதியில் பொதுமக்க ளின் பயன்பாட்டில் இருக்கிற 80 ஏக்கர்  நிலத்தில் இனி பொதுமக்கள் யாரும் நுழைய முடியாது.  அவை கட்டுப் படுத்தப்பட்ட பகுதியாக மாறிவிடும்.  இவ்வாறு பொது மக்கள் பயன்பாட்டிலிருந்த நிலத்தை அவர்களிடமிருந்து பறிப்பது சட்டப்படி செல்லத்தக்கதல்ல என சில கட்டிடப் பொறியாளர்கள் வாதிடுகின்றனர்.  பொது மக்களுக்கு மாற்று நிலம் வழங்கும் ஏற்பாடும் இல்லை. இங்கு ஏற்கனவே அமைந்திருக்கும் கிரேடு 1 பாரம் பரியக் கட்டிடங்களை இடிப்பதற்கு முன் அவை இடிக்கப் பட வேண்டுமா? வேண்டாமா? என ஒரு தணிக்கை நடத்தப்பட வேண்டுமென பாரம்பரியக் கட்டிட பாதுகாவ லர்கள் கூறுகின்றனர்.  ஆனால் அவ்வாறு எதுவும் நடை பெறவில்லை.  மத்திய அரசு தன்னிஷ்டப்படி இடிக்க முடிவெ டுத்துள்ளது என்கின்றனர். ஆயிரக்கணக்கான மரங்கள் வெட்டப்பட இருக்கின்றன.  இது சுற்றுச்சூழலைப் பாதிக்கும் என்பது சுற்றுச்சூழல் பாதுகாவலர்களின் கருத்து.  

ஆய்வு நடத்தவில்லை 

மிகப் பிரமாண்டமான இத்திட்டத்தின் சாதக பாதகங்கள் குறித்து பல்துறை நிபுணர்களைக் கொண்டு எந்த ஆய்வும் நடத்தப்பெறவில்லை.  ஆனால் இப்படி யான ஒரு ஆய்வு நடத்தப்பட்டிருக்க வேண்டுமென நகர்ப்புற திட்டவியலாளர்கள், பாரம்பரியக் கட்டிட மற்றும் சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் கருதுகின்றனர்.  பொதுமக்களின் கருத்தும் கேட்கப்பட்டிருக்க வேண்டுமென அவர்கள் கருதுகின்றனர்.  ஆனால்  தானடித்த மூப்பாக மோடி அரசு இதனை நிறைவேற்றத் துடிக்கிறது.

இத்திட்டம் செயல்படுத்தப்படுவது நிறுத்தப்பட வேண்டுமென உச்சநீதிமன்றத்தில் பல அமைப்புகள் வழக்குத் தாக்கல் செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.  இதற்கிடையில் சுற்றுச்சூழல் துறை தனது அனுமதியை இத்திட்டத்திற்கு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கொரோனா தொற்றினால் அவதிப்படும் ஏழை எளிய மக்களுக்கு உதவ மாநிலங்களுக்கு நிதி அளிக்க மறுக்கும் மோடி அரசு ரூ.20000 கோடியில் ஒரு ஆடம்பரத் திட்டத்தை நிறைவேற்றிடத் துடிக்கிறது.  இதனால் இந்திய ஏழைகளுக்கு என்ன பயன்?

தகவல் ஆதாரம் : தி குயிண்ட்


 

;