tamilnadu

img

தீவிரமாகும் பட்டினித் துயர்... (குறுங்கட்டுரை)

கொரோனாவால் பெருகியுள்ள பட்டினி 30 சதவீதம் மக்களை பாதித்துள்ளது. இதன்காரணமாக தற்போது மாதத்திற்கு பத்தாயிரம் குழந்தைகள் பட்டினியால் இறக்கின்றன. ஊட்டச்சத்து பற்றாக்குறைஎன்பது ஒரு நீண்டநாள் பிரச்சனையாக உள்ளது.இது ஒருதனிமனித பிரச்சனை என்பதிலிருந்து மாறி ஒரு தலைமுறையின் பேரழிவாக தற்போது உருவெடுத்துள்ளது. பல நாடுகளில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.ஆரம்ப சுகாதார நிலையங்கள் சீர்குலைந்துள்ளன. ஊட்டச்சத்து வழங்கும் உணவு திட்டம் செயல் இழந்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் இந்த ஒரு ஆண்டில் மட்டுமேஊட்டச்சத்து பற்றாக்குறை பத்து மடங்காக அதிகரித்துள்ளது. பட்டினியின் சிவப்பு மண்டலமாக மாறியுள்ள இந்நாட்டில் 5ல் ஒரு குழந்தை உயிரிழந்துள்ளது. பட்டினியால் மிகுதியாக வாடும் ஆப்பிரிக்கா, சூடான் போன்ற நாடுகளில் 9.6 லட்சம் மக்கள் ஒரு வேளை உணவுடன்  மட்டுமே நாளைக் கடத்துகின்றனர். இந்தப் பட்டினி விகிதம் இந்த ஆண்டில் மட்டுமே 65 சதவீதமாக விஸ்வரூபம் எடுத்திருப்பது வேதனைக்குரியது. கொரோனா பரவல் ஊரடங்குக்கு பின், மூன்று வேளை உணவு என்று இருந்த பல நாடுகளிலும் தற்போது இதுதான் பொதுவான நிலைமையாகவும் இருக்கிறது என்று ஐநா. அமைப்புகள் தெரிவித்துள்ளன. உலகளாவிய பட்டினித்துயரின் தீவிரம் குறித்து ஆழமாக பரிசீலித்து அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வரும் இந்த தீநுண்மி பெரும் நோய் தொற்று காலத்தில் குழந்தைகள் இறப்பு எண்ணிக்கையும் அதன் சதவிகிதமும் இன்னும் கூடுதலாகும் அபாயம் உள்ளது. 

===ஆரூரான்===

;