பழனி, ஜூலை 2- பழனி பகுதியில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப் படுபவர்கள் சிகிச்சைக்காக திண்டுக்கல், கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட னர். வியாழனன்று நான்கு பேருக்கு நோய் தொற்று உள்ளது உறுதிசெய்யப்பட்டது. அவர்கள் பழனி அரசு மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு கொரோனா சிகிச்சை தொடங்கப்பட்டது. டெங்கு வார்டாக செயல்பட்ட பகுதி தற்போது கொரோனா சிகிச்சை வார்டாக மாற்றப்பட்டுள்ளது. மூன்று மருத்துவர்கள், ஆளு செவிலியர்கள், ஆறு துாய்மை பணி யாளர்கள் சுழற்சி’ முறையில் பணிபுரிய உள்ளனர். சிவகங்கை சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை வருவாய் ஆய்வாளர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இவர் அமரா வதி கோரானா சிறப்பு மையத்தில் வைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.