tamilnadu

img

இராமேஸ்வரத்தில் மாதர்கள் ஆர்ப்பபாட்டம்

இராமநாதபுரம், ஜூலை 6- பதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா ஏம்பல் கிராமத்தைச் சேர்ந்த  ஏழு வயது சிறுமியை பாலியல் வன் கொடுமைக்குள்ளாக்கி கொலை செய்தவர்களுக்கு உச்ச பட்ச தண்டனை வழங்க வேண்டும். மாணவிகள், பெண்கள் மீதான வன்முறையை தடுத்துநிறுத்த வேண்டுமென வலியுறுத்தி இராமேஸ்வரத்தில் திங்களன்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தாலுகா தலை வர் க.வெங்கடேஸ்வரி தலைமை யில் ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது. தாலுகா செயலாளர் ஏ.ஆரோக் கிய நிர்மலா, பொருளாளர் கே. சுமதி, நிர்வாகிகள் ஏ. சகாயம், எம்.பாண்டிச்செல்வி, மோட்ச ராகினி, ஜி.ராதா, மாணவர் சங்க நிர்வாகி பி.வில்லியம் ஜாய்சி, ஊராட்சி உறுப்பினர் எம்.மாரியம் மாள் ஆகியோர் கலந்து கொண்டனர்.