tamilnadu

img

நைஜீரியாவை அச்சுறுத்தும் லசா காய்ச்சல் - பலி எண்ணிக்கை 29 ஆக உயர்வு

நைஜீரியாவில் லசா காய்ச்சலால் பலியானவர்களின் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 1969 ஆம் ஆண்டில் கண்டறியப்பட்ட லசா வைரசானது மார்பர்க் மற்றும் எபோலா எனும் இரண்டு கொடிய வைரஸ்களின் குடும்பத்தைச் சார்ந்தது. இந்த வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு கடுமையான காய்ச்சல், வாந்தி மற்றும் இரத்த சோகை போன்ற பிரச்சனைகள் ஏற்படும். எலிகள் மூலமாகவும், இந்நோய் பாதிக்கப்பட்டவர்களின் தொற்றாலும் பரவக்கூடிய இந்த வைரஸ் பாதிப்பால், நைஜீரியாவில் தற்போது 29 பேர் பலியாகி உள்ளனர். நூற்றுக்கும் அதிகமானவர்கள் இந்தக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 11 மாகாணங்கள் இக்காய்ச்சல் பாதிப்பு உள்ளது. இந்த காய்ச்சல் பரவுவதை கட்டுப்படுத்த, சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 

;