உதகை, ஆக. 29- நீலகிரி மாவட்டம், உப தலை ஊராட்சிக்குட்பட்ட பெரிய பிக்கெட்டி கிராமத் தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வரு கின்றனர். இப்பகுதியில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக தெருவிளக்கு எரி யாததால் மொத்த கிராம மும் இருளில் முழ்கும் அவ லம் இருந்து வருகிறது. மேலும், காட்டெருமைக ளின் தொல்லையும் உள்ள தால் பொதுமக்கள் வெளியில் வரவே அஞ்சு கின்றனர். ஆகவே, இது குறித்து சம்பந்தப்பட்ட அதி காரிகள் தலையிட்டு போர்க் கால அடிப்படையில் தெரு விளக்கு ஒளிர்ந்திட நடவ டிக்கை எடுக்க வேண்டு மென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ள னர்.