tamilnadu

img

வேன் கவிழ்ந்து விபத்து - 23 பேர் படுகாயம்

உதகை, செப் 3 - பந்தலூர் அருகே வேன் கவிழ்ந்து விபத் துக்குள்ளானதில் படுகாயமடைந்த 23  பேரை அப்பகுதி மக்கள் மீட்டு மருத்துவ மனையில் சேர்த்தனர்.  

நீலகிரி மாவட்டம், பந்தலூர் அருகே சேரம்பாடி பகுதியில் இயங்கி வரும் தனியார் தேயிலைத் தொழிற்சாலைக்கு கூலி வேலை  செய்வதற்காக புதனன்று வேன் ஒன்றில் தொழிலாளர்கள் ஏற்றிச் செல்லப்பட்டனர். அந்த வேன் சேரம்பாடி அரசு உயர்நிலைப் பள்ளி அருகே சென்றபோது நிலைதடுமாறி சாலையோரத்தில் கவிழ்ந்தது. அதில் பய ணித்த வாகன ஓட்டுநர் ஆமோஸ் உள்ளிட்ட  23 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்நிலை யில், இவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு  அருகில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இவ் விபத்து குறித்து சேரம்பாடி போலீசார் வழக் குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.