tamilnadu

img

கால்நடைகளின் மேய்ச்சல் நிலமாகும் வளம் மீட்பு பூங்கா

உதகை, ஜன. 23- குப்பைகளை தரம்பிரித்து உரம் தயாரிக்கப்படும் வளம் மீட்பு பூங்கா சமீப காலமாக திறந்தே கிடப்பதால் கால்நடை களின் மேய்ச்சல் பகுதியாக மாறியுள்ளது. நீலகிரி மாவட்டம், அதிகரட்டியில் வளம் மீட்பு பூங்கா  செயல்பட்டு வருகிறது. இங்கு அதிகரட்டி, ஜெகதளா, உலிக்கல் ஆகிய பேரூராட்சிகளுக்கு உட்பட்ட குடியி ருப்புகள் மற்றும் கடைகளில்  இருந்து சேகரிக்கப்படும் குப்பைகளை  மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம்பிரித்து உரம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதன் நுழைவு வாயிலில் ஆடு, மாடு உள்ளிட்ட வளர்ப்பு விலங்கு கள் உள்ளே வர அனுமதி இல்லை என்று அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இதன் நுழைவுவாயில் சமீப காலமாக திறந்தே  கிடப்பதால் உட்பகுதியில் கால்நடைகள் எளிதில் நுழைந்து  குப்பைகளை மேய்கின்றன.  எனவே சம்பந்தப்பட்ட துறையி னர் கால்நடைகள் உள்ளே புகாத வண்ணம் நடவடிக்கை எடுத்து உரிய பராமாரிப்புகளை மேற்கொள்ள வேண்டு மென்று பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

;