tamilnadu

அனைத்து கடைகளிலும் விலைப்பட்டியல் வைத்திட நடவடிக்கை எடுத்திடுக - மாவட்ட ஆட்சியரிடம் மார்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை

உதகை, ஜூலை 9- நீலகிரி மாவட்டத்தில் செயல்படும் அனைத்து அத்தியாவசிய பொருள் கடை களிலும் விலைப்பட்டியல் வைத்திட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.  இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் வி.ஏ.பாஸ்கரன், மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்ப தாவது, மத்திய, மாநில அரசுகள் அறி வித்துள்ள பொது முடக்கம் காரணமாக சாமானிய மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், அவர்களின் பொருளாதாரம் பாதிப்ப டைந்துள்ளது. இந்நிலையில், மக்கள் தங் களின் அத்தியாவசிய தேவைக்கு பொருட் களை வாங்க கடைகளுக்கு செல்கையில், பொருட்களின் விலை கடைக்கு கடை வித்தியாசம் உள்ளது. இதனால் நியாய மான விலையில் பொருட்கள் கிடைக் காமல் சிரமப்படுகின்றனர். எனவே, பொது மக்களின் துயர் துடைக்க அனைத்து அத்தியாவசிய கடைகளிலும் விலைப் பட்டியலை மக்களின் பார்வையில்படும்படி வைத்திட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதிக விலைக்கு பொருட்களை விற்போர் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

;