tamilnadu

img

நிலுவை சம்பளம் வழங்க கோரிக்கை பிஎஸ்என்எல் ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

உதகை,பிப்.3- நிலுவை சம்பளம் வழங்க வேண் டும் என்று பிஎஸ்என்எல் ஓய்வூதியர்  சங்கத்தினர் திங்களன்று ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். அரசின் பொதுத்துறை நிறுவனங் களை தனியாருக்கு விற்கும் நோக்கில்  மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அரசின் பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த 90 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஜனவரி மாதம் 31ந்தேதியன்று விருப்ப ஓய்வு திட்டத்தின் மூலம் வெளியேற்றபட்டனர். இவர்களுக்கு கடந்த இரண்டு மாதமாக சம்பளம் வழங்கப்படவில்லை. இந்நிலையில் மாதாமாதம் பென்ஷன் வழங்க வேண்டும், இரண்டு மாத நிலுவை சம்பளம் வழங்க வேண்டும். சேம நல நிதியில் தேவையான மரியாதை  கொடுக்கப்படாததை கண்டித்தும்  திங்களன்று உதகையில் உள்ள பிஎஸ் என்எல் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அகில  இந்திய பிஎஸ்என்எல் தொலைத்தொ டர்பு இலாகா ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஆர்.சதாசிவம் தலைமை வகித்தார். மாவட்ட செயலா ளர் வி.மகேஸ்வரன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். பிஎஸ்என்எல் ஊழி யர் சங்கத்தின் கிளை செயலாளர் ஆர்.பசுபதி, தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பி.விஜயகுமரன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் மாவட்ட துணை செயலாளர் டி.விஜய குமார் நன்றி கூறினார். இதில் ஏராள மான ஓய்வூதியர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக் கங்களை எழுப்பினர்.
கோவை
இதேபோல், கோவை பிஎஸ்என் எல் தலைமை அலுவலகத்தில் நிலுவை  சம்பளம் வழங்காத மத்திய அரசைக்  கண்டித்து அகில இந்திய பிஎஸ்என் எல், டிஓடி ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.