tamilnadu

img

அரசு மருத்துவமனையை சீர்படுத்திட பொதுமக்கள் கோரிக்கை

உதகை, செப். 13- நீலகிரி மாவட்டம் பந்தலூர் அரசு  மருத்துவமனையை சீர்படுத்த வேண் டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டம், பந்தலூர்  தாலுகாவில் சுமார் 50 ஆயிரத்திற் கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின் றனர். இங்குள்ள அரசு மருத்துவம னைக்கு தினம்தோறும் 300க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். ஆனால், இங்கு போதிய மருத்துவர்கள், ஆய்வுகூட பரி சோதகர்கள் இல்லை. சிடிசி ஸ்கேன், எக்ஸ்ரே உள்ளிட்ட கருவிகள் பழு தடைந்து உள்ளது என அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இத னால், நோயாளிகள் தனியார் மருத்து வமனையில் அதிக கட்டணம் செலுத்தி  எக்ஸ்ரே மற்றும் ஸ்கேன் எடுக்கவேண் டிய நிர்பந்தத்திற்கு ஆளாகின்றனர்.  மேலும், இந்தக் கட்டிடம் கடந்த  நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு  கட்டப்பட்டது. இது தற்போது சிதில மடைந்தும், இதன் மேற்கூரைகளில் விரிசல் ஏற்பட்டும் உள்ளது. இதனால் மழைக்காலங்களில் மழைநீர் உள்ளே ஒழுகுவதால் உள்நோயாளிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். ஆகவே, மருத்துவமனையை விரைந்து சீர்படுத்தவேண்டும் என் றும், மருத்துவமனையின் அடிப்படை  தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டு மென அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

;