tamilnadu

நீலகிரி மாவட்ட காவல்துறை புதிய செயலி அறிமுகம்

உதகை, ஆக. 24- நீலகிரி மாவட்டத்தில் காவல்துறைக் கென தனியான கைபேசி செயலி (Nilgiris district police App) உருவாக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் சசிமோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தாவது, நீலகிரியில் பெரும்பாலான மக்கள் நேரடியாக தங்கள் குறைகளை காவல்து றைக்கும் உயர் அதிகாரிகளுக்கும் தெரி விக்கவோ தங்களது புகார்களை நேரடியாக வழங்கவோ சிரமமான சூழ்நிலை உள்ளது. மேலும் தற்போது கொரோனாத் தொற்று உள்ள காரணத்தினால் மக்கள் இந்த செய லியைப் பயன்படுத்தி புகார்களைத் தெரி விக்கலாம்.

மேலும் மாவட்டத்திற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் சுலபமாக தங்க ளது புகார்களை எங்கே யாரிடம் தெரிவிப் பது என குழம்பும் நிலையும் உள்ளது. எனவே இச்செயலியைப் பொதுமக்கள் தங் களது கைப்பேசியில் பதிவிறக்கம் செய்து தங்களது கைபேசியில் இருந்தே புகார் களை நேரடியாக இதற்கென தனியாக நிறு வப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறைக்குத் தெரிவிக்க இயலும். மேலும் இந்த செயலி யில் நீலகிரியிலுள்ள அனைத்து காவல் அதி காரிகள், காவல் நிலையங்கள் சிறப்புப் பிரி வுகள் உள்ளிட்ட விவரங்களையும், தொலை பேசி எண்களையும் இந்த செயலியில் தெரிந்து கொள்ளலாம்.

மேலும் சுற்றுலாப் பயணிகள் தாங்கள் செல்ல வேண்டிய சுற்று லாத் தலங்களின் விபரங்களையும், மேலும் இருக்குமிடத்தின் மிக அருகேயுள்ள காவல் நிலையம், பேருந்து நிலையம், ரயில் நிலை யம், வாகனம் நிறுத்துமிடம், குடிநீர் வழங் கும் தானியங்கி எந்திரம் ஆகியவற்றைப் பற் றியும் தெரிந்து கொள்ளலாம். எனவே பொது மக்களும் சுற்றுலாப் பயணிகளும் இந்த செயலியை சரிவர பயன்படுத்தி பயனடையு மாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள் ளது.

;