உதகை, பிப். 26- நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில் உள்ள தினசரி மார்க் கெட்டில் செவ்வாயன்று அதிகாலை திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இத்தீவிபத்தில் மளிகை கடை, பூக்கடை, காய்கறிக் கடை உட்பட 11 கடைகள் எரிந்து சேதமாகின. இதனால், இக்கடை வியாபாரிகளின் வாழ்வாதாரம் கேள் விக்குறியாகி உள்ளது. இதனிடையே பாதிப்படைந்து வியா பாரிகள், தங்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரி நீலகிரி மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் மனு அளித் துள்ளனர். மேலும், பாதிப்படைந்த வியாபாரிகளுக்கு உரிய நிவாரணமும், எரிந்த இடத்தை போர்க்கால அடிப்படையில் சுத்தம் செய்து கொடுக்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோத்தகிரி தாலுகா செயலாளர் வி.மணிகண்டன் வலியு றுத்தியுள்ளார்.