tamilnadu

img

நீலகிரியில் ஆ.ராசா வெற்றி

நீலகிரி:
நீலகிரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஆ.ராசா 2 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
நீலகிரி மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பாக எம்.தியாகராஜனும், திமுக சார்பாக ஆ.ராசாவும், மக்கள் நீதி மய்யம்சார்பில் என்.ராஜேந்திரனும் போட்டியிட்டனர்.  வாக்கு எண்ணிக்கை தொடங்கியதிலிருந்தே ஆ.ராசா தொடர்ந்து முன்னிலையில் இருந்துவந்தார். 23 சுற்றுகள் வாக்கு எண்ணிகை முடிந்துள்ள நிலையில் ஆ.ராசாவெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஆ.ராசா 5,47,832 வாக்குகளையும், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் எம்.தியாகராஜன் 3,42,009 வாக்குகளையும் பெற்றுள்ளனர். இதன்மூலம் 2,05,357 வாக்குகள் வித்தியாசத்தில் நீலகிரி தொகுதியில் ஆ.ராசா வெற்றி பெற்றுள்ளார். மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ராஜேந்திரன் 41,169 வாக்குகளையும், சுயேச்சை வேட்பாளர் ராமசுவாமி 40,419 வாக்குகளையும் பெற்றுள்ளனர். இத்தொகுதியில் நோட்டாவில் 18,149 வாக்குகள் பதிவாகியுள்ளன.

ஒட்டுமொத்த வாக்குகளில் 54.2 விழுக்காடு வாக்குகளை ஆ.ராசாவும், 33.84 விழுக்காடு வாக்குகளை தியாகராஜனும் பெற்றுள்ளனர். ஆ.ராசாவின் வெற்றியை நீலகிரியில் திமுகவினர் மிக உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர்.
 

;